முவர்ஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் பிரகாசித்த தீஷன் விதுசன்

SLC Major League Tournament 2022

174

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான 12 போட்டிகள் இன்று (28) நிறைவுக்கு வந்தன.

இதில் பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பொலிஸ் விளையாட்டுக்  கழகத்துக்கு எதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த முவர்ஸ் விளையாட்டுக் கழகம், 193 ஓட்டங்களால் வெற்றியீட்டி இம்முறை முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

முவர்ஸ் கழகத்துக்காக விளையாடி வருகின்ற மொஹமட் சமாஸ் முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் கடந்து 51 ஓட்டங்களைக் குவித்தார். முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியிலும் அவர் அரைச்சதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட யாழ். வீரர் தீஷன் விதுசன் முதல் இன்னிங்ஸில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அச்த்தியிருந்தார்.

முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 21 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சாளரான தீஷன் விதுசன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, இன்று நிறைவடைந்த போட்டிகளில் கொழும்பு கிரிக்கெட் கழகம், BRC கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் Ace Capital கிரிக்கெட் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவு செய்தன.

இதனிடையே, போட்டியின் 3ஆவது மற்றும் கடைசி நாளான இன்று லங்கன் கிரிக்கெட் கழக வீரர்களான லக்ருவன் வீரசிங்க மற்றும் தேஷான் டயஸ், களுத்துறை நகர கழக வீரர் சுகித மனோஜ், கண்டி சுங்க விளையாட்டுக் கழக வீரர் சானக விஜேசிங்க, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக வீரர் சந்தூஷ் குணதிலக்க மற்றும் நுகேகொட விளையாட்டுக் கழக வீரர் பெதும் டில்ஷான் ஆகியோர் சதங்கள் அடித்து அசத்தியிருந்தனர்.

அத்துடன், ராகம கிரிக்கெட் கழகத்தின் சஷிக துல்ஷான், SSC கழகத்தின் லக்ஷித ரசன்ஜன, கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் விஷ்வ பெர்னாண்டோ, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் டில்ஷான் முனவீர, பதுரெலிய விளையாட்டுக் கழகத்தின் சலன டி சில்வா, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் திலும் சுதீர, இராணுவ கிரிக்கெட் கழகத்தின் கௌமால் நானயக்கார மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் திமிர இருஷிக ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 273 (71.2) – தினுக டில்ஷான் 72, பபசர வதுகே 51, மொஹமட் சமாஸ் 51, சரித் சுதாரக 4/62, லஹிரு தியந்த 4/68

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 203 (66.4) – நதீர பாலசூரிய 70, ஹேஷான் பெர்னாண்டோ 44, ரமேஷ் மெண்டிஸ் 3/35, தீஷன் விதூஷன் 2/19, திலங்க உதேஷன 2/53

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 256/6d (59) – பபசர வதுகே 73, பசிந்து சூரியபண்டார 73, தினுக டில்ஷான் 47, லஹிரு தியன்த 4/98, நளின் ப்ரியதர்ஷன 2/59

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 133 (36) – சதுரங்க குமார 50, சானுக டில்ஷான் 4/33, தீஷன் விதூஷன் 3/29

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 193 ஓட்டங்களால் வெற்றி

ராகமகிரிக்கெட்கழகம்எதிர்செபஸ்டியன்ஸ்கிரிக்கெட்கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 591/3d (152.3) – நிஷான் மதுஷ்க 300*, ஜனித் லியனகே 140, சமிந்த பெர்னாண்டோ 83, அவிஷ்க தரிந்து 62*, தரிந்து ரத்நாயக்க 2/171

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 193 (59.1) – தரிந்து ரத்நாயக்க 38, சஸ்ரிக புஸ்ஸேகொல்ல 37, சஷிக துல்ஷான் 6/70

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 159/2 (51) – அக்ஷீப் நாத் 66, சவுராப் டுபே 45

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

SSC கழகம்எதிர்லங்கன்கிரிக்கெட்கழகம்

SSC கழகம் – 518/4d (107.4) – நிபுன் தனன்ஜய 152, நுவனிந்து பெர்னாண்டோ 140, சம்மு அஷான் 100*, க்ரிஷான் சன்ஜுல 77, மனோஜ் சரச்சிந்த்ர 41, மிரங்க விக்ரமகே 2/133

லங்கன் கிரிக்கெட் கழகம் – 136 (60.4) – தேஷான் டயஸ் 43, ரஜீவ வீரசிங்க 29, லக்ருவன் அபேரட்ன 20, பிரபாத் ஜயசூரிய 3/29, கவிந்து நதீஷான் 2/18, கலன பெரேரா 2/20, நிசல தாரக 2/34

லங்கன் கிரிக்கெட் கழகம் – 352/7 (98.5) – லக்ருவன் வீரசிங்க 145*, தேஷான் டயஸ் 114, மிரங்க விக்ரமகே 32, லக்ஷித ரசன்ஜன 5/60

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

கோல்ட்ஸ்கிரிக்கெட்கழகம்எதிர்காலிகிரிக்கெட்கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 463/5d (100) – விஷாத் ரன்திக 114*, ரவிந்து ரஷன்த 95, அவிஷ்க பெரேரா 79, சாலின் டி மெல் 75, சந்தகென் பத்திரன 2/93

காலி கிரிக்கெட் கழகம் – 173 (72.1) – டில்ஷான் காஞ்சன 78, சமீன் கந்தனாராச்சி 43, துனித் வெல்லாலகே 4/46, தனன்ஜய லக்ஷான் 4/40

காலி கிரிக்கெட் கழகம் – 221/9 (92) – , சமீன் கந்தனாராச்சி 80, விநுர துல்சர 64, தனன்ஜய லக்ஷான் 4/44, துனித் வெல்லாலகே 2/43

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

ப்ளும்பீல்ட்கிரிக்கெட்கழகம்எதிர்சரசென்ஸ்விளையாட்டுக்கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 67 (28) – மினெத் ப்ரேமரத்ன 15, இஷித தேவ் விஜேசுந்தர 6/23, மொஹமட் டில்ஷாத் 3/20

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 204 (66.3) – சந்துன் மெண்டிஸ் 50, தவீஷ அபிஷேக் 42, சிதார கிம்ஹான 35, லஹிரு மதுஷங்க 5/91, சானக கொமசாரு 3/60

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 196 (47) – மதுக லியனபத்திரனகே 34*, மினெத் ப்ரேமரத்ன 34, சந்துன் மெண்டிஸ் 3/37, இஷித தேவ் விஜேசுந்தர 3/60, கவிக டில்ஷான் 2/49

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 60/2 (26.4) – நவிந்து நிர்மால் 37

முடிவு – சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

கொழும்புகிரிக்கெட்கழகம்எதிர்களுத்துறைநகரகழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 454/4d (101.3) – கமிந்து மெண்டிஸ் 200*, லசித் அபேரட்ன 93, நிமேஷ் குணசிங்க 78, இன்ஷக சிறிவர்தன 3/133

களுத்துறை நகர கழகம் – 142 (57.2) – சதீஷ் ஜயவர்தன 45. பவன்த ஜயசிங்க 38, அஷான் பிரியன்ஜன் 5/29, மாலிந்த புஷ்பகுமார 4/74

களுத்துறை நகர கழகம் – 250 (59.1) – சுகித மனோஜ் 137, இன்ஷக சிறிவர்தன 37, விஷ்வ பெர்னாண்டோ 5/70, மாலிந்த புஷ்பகுமார 3/104

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 62 ஓட்டங்களால் வெற்றி

NCC கழகம்எதிர்விமானப்படைவிளையாட்டுக்கழகம்

NCC கழகம் – 307 (72.3) – அசேல் சிகேரா 74, நிரோஷன் டிக்வெல்ல 51, அஹான் விக்ரமசிங்க 48, லசித் எம்புல்தெனிய 47, துலாஞ்சல மெண்டிஸ் 5/83, கயான் சிறிசோம 2/64, லசந்த ருக்மால் 2/78

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 259 (88.4) – தேஷான் பெர்னாண்டோ 41, ஆதித்ய சிறிவர்தன 41, லசித் எம்புல்தெனிய 3/37, அம்ஷி டி சில்வா 3/91, அசேல் சிகேரா 2/15

NCC கழகம் – 304/9 (97) – அசேல் சிகேரா 69, லஹிரு உதார 65, சஹன் ஆரச்சிகே 59, கயான் சிறிசோம 3/48

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமிநிலையில் முடிவு

கண்டிசுங்கவிளையாட்டுக்கழகம்எதிர்BRC கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 113 (38.1) – ரஷ்மிக மதுஷங்க 30, திலகரட்ன சம்பத் 5/39, துவிந்து திலகரட்ன 3/13

BRC கழகம் – 446/4d (110) –டிலான் ஜயலத் 203*, லியோ ப்ரான்சிஸ்கோ 55, மோதித ரணதுங்க 52, துஷான் ஹேமன்த 50*, திலகரட்ன சம்பத் 41, மெதுஷான் திலின 2/87, நிசல் ஆகாஷ் 2/89

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 295 (75.4) – சானக விஜேசிங்க 103, மிதுன் ஜயவிக்ரம 59, பராஸ் சர்மா 51, ருவீன் பொன்சேகா 34, துஷான் ஹேமன்த 4/90, திலகரட்ன சம்பத் 3/63

முடிவு – BRC கழகம் இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்களால் வெற்றி

Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 223 (50.4) – நினாத் கதாம் 60, ப்ரமோத் ஹெட்டிவத்த 43, தனுக தாபரே 32, தனுஷ்க சந்தருவன் 4/65, சாருக பெர்னாண்டோ 3/38, ஜடின் சக்சேனா 2/45

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 231 (84.1) – திமுத் சந்தருவன் 67, ஜடின் சக்சேனா 42, நிம்சர அதரகல்ல 4/55, லசித் குரூஸ்புள்ளே 2/32

Ace Capital கிரிக்கெட் கழகம் – 302/8d (54) – லசித் குரூஸ்புள்ளே 106, ப்ரமோத் ஹெட்டிவத்த 59*, நினாத் கதாம் 47, டில்ஷான் முனவீர 5/100

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 160 (65.3) – மிசானுர் ரஹ்மான் 57, டில்ஷான் முனவீர 33, தனுக தாபரே 3/30

முடிவு – Ace Capital கிரிக்கெட் கழகம் 134 ஓட்டங்களால் வெற்றி

பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 207 (87.1) – அலங்கார அசங்க 65, ரனேஷ் சில்வா 40, நவோத் பரணவிதான 5/27, டில்ருவன் பெரேரா 2/62

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 373 (93.3) – சதீர சமரவிக்ரம 172, சந்தூஷ் குணதிலக்க 110, ரொன் சந்த்ரகுப்த 21, சலன டி சில்வா 6/150, அனுக் பெர்னாண்டோ 3/78

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 155 (44.4) – அனுக் பெர்னாண்டோ 56, கிஹான் ரூபசிங்க 25, திலும் சுதீர 5/52, நவோத் பரணவிதான 2/14

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 11 ஓட்டங்களால் வெற்றி

இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

இராணுவ கிரிக்கெட் கழகம் – 452/4d (114.1) – துலின டில்ஷான் 166, லக்ஷான் எதிரிசிங்க 120, அசேல குணரத்ன 87, பெதும் பொதேஜு 50*

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 297 (113.3) – லக்ஷான் ரொட்றிகோ 68, ரொஷான் ஜயவிக்ரம 64, உமேஷ் கசுன் 43, கௌமால் நானயக்கார 6/90

இராணுவ கிரிக்கெட் கழகம் – 108/0 (33) – ஷெஹான் பெர்னாண்டோ 72*, பெதும் பொதேஜு 31*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 419 (129.1) – அனுஜ் ஜொடின் 152, ஜதார் 77, ரவீன் யசஸ் 75, நவீன் பெர்னாண்டோ 3/76, கைசர் அஷ்ரப் 2/105

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 185 (69) – நயன பெர்னாண்டோ 52, கெவின் பெரேரா 29, திமிர இருஷிக 5/36

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 185/2 (65) – பெதும் டில்ஷான் 102*, சாபிர் ட்ருக்வெல 45

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<