மூவர்ஸ் அணிக்காக அறிமுக போட்டியில் விக்கெட்டுகளை குவித்த விதுசன்

Major Club Emerging 3-Day Tournament 2022

3480
Theesan Vithushan

இலங்கையில் நடைபெறும் முன்னணி கழக வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித்தொடரில் யாழ். வீரர் தீஷன் விதுசன் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரான தீஷன் விதுசன் தற்போது நடைபெற்றுவரும் மேஜர் கழக வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான தொடரில் மூவர்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளைாடி வருகின்றார்.

>> ஆறுதல் வெற்றியுடன் T20I தொடரை நிறைவு செய்த இலங்கை

இந்தநிலையில் நேற்று (20) நடைபெற்றுமுடிந்த  கடற்படை கழகத்துக்கு எதிரான போட்டியில் மூவர்ஸ் அணிக்காக தீஷன் விதுசன் அறிமுகமாகியிருந்தார்.

தான் அறிமுகமாகியிருந்த முதல் போட்டியிலேயே சுழல் பந்துவீச்சாளரான தீஷன் விதுசன் அபாரமாக பந்துவீசியிருந்தார். இவர் முதல் இன்னிங்ஸில் 22.1 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசிய இவர் 15.3 ஓவர்கள் பந்துவீசி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

எனவே, தான் அறிமுகமாகிய முதல் போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீஷன் விதுசன், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் மூவர்ஸ் அணியும் போட்டியில் வெற்றியை பதிவுசெய்தது.

குறித்த இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மூவர்ஸ் அணி 263 ஓட்டங்களை குவித்ததுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மூவர்ஸ் அணி 229/9 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்த, கடற்படை அணி 114 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, 235 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மூவர்ஸ் அணி வெற்றிபெற்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<