விமானப்படை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் அணி

42
 

இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் எமர்ஜிங் லீக் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (13) நிறைவுக்கு வந்தது.  

SSC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், SSC (121) அணி மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (152) ஆகியவற்றின் முதல் இன்னிங்ஸினை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை SSC அணி மீண்டும் தொடர்ந்தது.

பந்தை சேதப்படுத்திய நிகோலஸ் பூரானுக்கு போட்டித்தடை

இன்று SSC அணிக்காக மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கிரிஷான் சஞ்சுல சதம் தாண்டி 102 ஓட்டங்களை குவித்தார். அவரோடு சோஹான் டி லிவேரா 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு SSC அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 314 ஓட்டங்களை குவித்தது

அதேநேரம் சதீஷ் பதிரனகே தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திற்காக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்

SSC அணியின் இரண்டாம் இன்னிங்ஸினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 284 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் தமது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து சிறந்த நிலையில் காணப்படுகின்றது

Photos: SSC vs Tamil Union C & A – SLC Major Emerging Tournament 2019/20

தமிழ் யூனியன் அணிக்காக களத்தில் நிற்கும் கமேஷ் நிர்மால் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றார்.

போட்டியின் சுருக்கம் 

SSC (முதல் இன்னிங்ஸ்) – 121 (36.1) சோஹான் டி லிவேரா 28, சுபுன் கவிந்த 4/22, தமித்த சில்வா 4/31

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (45.5) யோஹான் மெண்டிஸ் 63, ஆகாஷ் செனரத்ன 4/42

SSC அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 314 (66.3) கிரிஷான் சஞ்சுல 102, சொஹான் டி லிவேரா 92, திலான் பிரஷான் 75, சதீஷ் பதிரனகே 5/59

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 96/1 (19) கமேஷ் நிர்மால் 59*

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் விமானப்படைக்கு எதிராக கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்து தொடரின் இறுதிப் போட்டிக்கும் தெரிவாகியிருக்கின்றது

போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், விமானப்படையின் முதல் இன்னிங்ஸை (104) அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் அவிஷ்க பெர்னாந்துவின் (120) சதத்தோடு 311 ஓட்டங்களை குவித்துக் கொண்டது

Photos: Colts SC vs Air Force SC | QF 2 | SLC Major Emerging Tournament 2019/20

விமானப்படை அணியின் பந்துவீச்சில் நுஸ்கி அஹமட் மற்றும் சுமிந்த லக்ஷன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்

இதன் பின்னர் 205 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த விமானப்படை கிரிக்கெட் கழகம் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது. விமானப்படை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை கனிஷ்க மதுஷன் 71 ஓட்டங்களுடன் பதிவு செய்ய பிரவீன் ஜயவிக்ரம 4 விக்கெட்டுக்களை சாய்த்து கோல்ட்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்

போட்டியின் சுருக்கம் 

விமானப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 104 (44.1) சபீக் இப்தாரி 47, பிரவீன் ஜயவிக்ரம 5/30

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 311 (63.3) அவிஷ்க பெர்னாந்து 120, ஹேஷான் தனுஷ்க 62, நுஸ்கி அஹமட் 4/52, சுமித லக்ஷன் 4/117

விமானப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 176 (56) கனிஷ்க மதுஷன் 71, பிரவீன் ஜயவிக்ரம 4/81

முடிவுகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் வெற்றி 


இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை கிரிக்கெட் கழகம்

NCC அணியின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இராணுவப்படை அணியின் முதல் இன்னிங்ஸை (139) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கடற்படை விளையாட்டுக் கழகம் 93 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது

கோல்ட்ஸ் அணிக்காக சதம் விளாசிய அவிஷ்க பெர்னாந்து

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), உள்ளூர் கழங்கள் இடையே நடாத்தும் மேஜர்…

இதன் பின்னர் 43 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இராணுவப்படை விளையாட்டுக் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது

Photos: Navy Sports Club vs Army Sports Club – QF 1 | SLC Major Emerging Tournament 2019/20

இராணுவப்படை அணிக்காக அதன் துடுப்பாட்டத்தில் கிஹான கோரலகே 42 ஓட்டங்களை குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 139 (66) கிஹான் கோரலகே 31, சவிந்து பீரிஸ் 3/41

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 93 (47.2) கவிந்து குலரத்ன 6/17, ஹன்ஷ டி சில்வா 4/23

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 117/6 (48) கிஹான் கோரலகே 42, சவிந்து பீரிஸ் 4/42

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

கோல்ட்ஸ் அணி மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் NCC அணியின் முதல் இன்னிங்ஸை (323) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய NCC அணி 223 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் எடுத்தது.

NCC அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரவிந்து பெர்னாந்து 77 ஓட்டங்கள் குவிக்க, நிமேஷ் விமுக்தி சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

Photos – Chilaw MCC vs NCC | Quarter Finals – 03 | SLC Major Emerging Tournament 2019/20

பின்னர் 102 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 95 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் லசித் குரூஸ்புள்ளே 60 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (67.1) லசித் குரூஸ்புள்ளே 134, றிசித் உபுமல் 56, தில்ஷான் சஞ்சீவ 55, லசித் எம்புல்தெனிய 4/86

NCC (முதல் இன்னிங்ஸ்) – 221 (85.5) ரவிந்து பெர்னாந்து 77, நிமேஷ் விமுக்தி 3/57

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 95/8 (27) லசித் குரூஸ்புள்ளே 60*

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க