Home Tamil அழைப்பு T20 தொடரின் சம்பியனாக குசல் மெண்டிஸின் ரெட்ஸ் அணி

அழைப்பு T20 தொடரின் சம்பியனாக குசல் மெண்டிஸின் ரெட்ஸ் அணி

181

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை ஆசியக் கிண்ணம் மற்றும் T20I உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கு தயார்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்த, அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலான SLC ரெட்ஸ் அணி, புளூஸ் அணியினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

இறுதிப் போட்டி வாய்ப்பை பெற்றுக்கொண்ட SLC ரெட்ஸ்

நான்கு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் அடிப்படையில் SLC ரெட்ஸ் மற்றும் புளூஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

தொடர்ந்து கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, ரெட்ஸ் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை புளூஸ் அணிக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய புளூஸ் அணி சிறந்த தொடக்கத்தை பெற்ற போதும் பின்னர் தடுமாற்றத்தினை எதிர்கொண்டது. இந்த நிலையில் மத்திய வரிசையில் ஆடிய அஷேன் பண்டாரவின் ஆட்டம் கைகொடுக்க புளூஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. புளூஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷேன் பண்டார 30 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில் லஹிரு உதார 37 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெட்ஸ் அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷன மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய புளூஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

ரெட்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் தலைவர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது இருந்ததுடன் தொடரில் இரண்டாவது அரைச்சதத்தினைப் பதிவு செய்து 45 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதேநேரம் வனிந்து ஹஸரங்க 14 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்கள் எடுத்து ரெட்ஸ் அணியின் வெற்றியில் பங்களிப்பு வழங்கினார்.

சுபர் கிங்ஸ் அணியில் இணையும் தீக்ஷன! ; தலைவராகும் டு பிளெசிஸ்!

புளூஸ் அணியின் பந்துவீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

தொடர் நாயகன் விருதினை குசல் மெண்டிஸ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Blues
136/6 (20)

Reds
137/3 (16.5)

Batsmen R B 4s 6s SR
Lahiru Udara c Matheesha Pathirana b Lahiru Madushanka 37 40 4 0 92.50
Lahiru Samarakoon lbw b Maheesh Theekshana 6 9 1 0 66.67
Sadeera Samarawickrama c & b Maheesh Theekshana 10 6 2 0 166.67
Dhananjaya de Silva st Kusal Mendis b Dunith wellalage 25 19 4 0 131.58
Ashen Bandara not out 40 30 4 0 133.33
Janith Liyanage c Asitha Fernando b Lahiru Madushanka 12 14 0 0 85.71
Chamika Karunaratne lbw Asitha Fernando b 2 2 0 0 100.00


Extras 4 (b 0 , lb 2 , nb 0, w 2, pen 0)
Total 136/6 (20 Overs, RR: 6.8)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 22 2 5.50
Asitha Fernando 4 0 31 2 7.75
Dunith wellalage 4 0 27 1 6.75
Matheesha Pathirana 2 0 20 0 10.00
Wanindu Hasaranga 4 0 24 0 6.00
Lahiru Madushanka 2 0 10 1 5.00


Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle c Dilshan Madushanka b Praveen Jayawickrama 25 15 2 1 166.67
Kusal Mendis not out 56 45 4 1 124.44
Bhanuka Rajapakse lbw b 9 10 1 0 90.00
Kamindu Mendis c Suminda Lakshan b Praveen Jayawickrama 18 18 0 1 100.00
Wanindu Hasaranga not out 24 14 4 0 171.43


Extras 5 (b 0 , lb 0 , nb 1, w 4, pen 0)
Total 137/3 (16.5 Overs, RR: 8.14)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 1 0 18 0 18.00
Praveen Jayawickrama 4 0 34 2 8.50
Chamika Karunaratne 2.5 0 18 0 7.20
Pramod Madushan 2 0 23 0 11.50
Dhananjaya de Silva 4 0 19 0 4.75
Suminda Lakshan 3 0 25 1 8.33



முடிவு – ரெட்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<