அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாமர சில்வா

54

இலங்கை கிரிக்கெட் அணி உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரில் இன்று (14) மொத்தமாக 6 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இன்று இடம்பெற்ற போட்டிகளில் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சாமர சில்வா நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் விளையாடி பாணதுறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராகாக அரைச்சதம் (58) பெற்றிருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக சாமர சில்வாவின் புளூம்பீல்ட் அணி பாணதுறை விளையாட்டுக் கழகத்திடம் 2 விக்கெட்டுகளால் தோல்வியை தழுவியிருந்தது. 

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக சகலதுறையிலும் அசத்திய டில்ஷான் முனவீர

இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர்…………..

அதேநேரம், மற்றுமொருவீரராக துடுப்பாட்டத்தில் திறமையினை வெளிப்படுத்திய இளம் சகலதுறை வீரரான ரமேஷ் மெண்டிஸ் சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக 72 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். ரமேஷ் மெண்டிஸின் துடுப்பாட்ட உதவியோடு சோனகர் கிரிக்கெட் கழக அணி காலி கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இவர்கள் ஒருபுறமிருக்க றாகம கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் வீரரான அமில அபொன்சோ 3 விக்கெட்டுக்களைச் சாய்த்து திறமையினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A

புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் எதிர் பாணதுறை கிரிக்கெட் கழகம் 

இடம் – மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், கட்டுநாயக்க

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 136/4 (20) – சாமர சில்வா 58, சச்சின் ஜயவர்த்தன 41*, அஸார் அட்டாரி 2/16

பாணதுறை விளையாட்டுக் கழகம் – 137/8 (19.5) – மின்ஹாஜ் ஜலீல் 47, ஹர்ஷ கூரே 36, நிபுன கமகே 2/15

முடிவு – பாணதுறை விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி 

Photos: Panadura SC vs Bloomfield C & AC | SLC Invitation T20 Tournament 2019/20


BRC எதிர் நுகேகொட கிரிக்கெட் கழகம்

இடம் – P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

BRC – 148/5 (20) – ரமிந்த விஜேசூரிய 41, டேஷான் டயஸ் 38, பசிந்து மதுஷான் 2/17

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 141 (19.5) – இரோஷ் சமரவீர 56, ப்ரமோத் ஹெட்டிவத்த 41, ஹஷேன் ராமநாயக்க 3/21, துவிந்து திலகரட்ன 3/24

முடிவு – BRC அணி 7 ஓட்டங்களால் வெற்றி  

Photos: Nugegoda S & WC vs BRC | SLC Invitation T20 Tournament 2019/20


காலி கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம்

இடம் – டி சொய்ஸா கிரிக்கெட் கழகம், மொரட்டுவ

காலி கிரிக்கெட் கழகம் – 130/7 (20) – நிமேஷ் பெரேரா 33, நிமந்த சுபசிங்ஹ 2/19, அனுக் பெர்னாந்து 2/27

சோனகர் கிரிக்கெட் கழகம் – 131/5 (18.2) – ரமேஷ் மெண்டிஸ் 72*, ஆபித் ஹஸன் 2/16

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாதம்………….

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

இடம் – மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், கட்டுநாயக்க

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் – 78/9 (20) – ஹசித நிர்மால் 23, தனோஷ் டி சில்வா 4/18, அலங்கார அசங்க 2/07, சஹான் ஜயவர்தன 2/10

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 84/3 (7.5) – லஹிரு மிலந்த 29*

முடிவு – பதுரெலிய கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

Photos: Badureliya CC Vs Unichela SC | SLC Invitation T20 Tournament 2019/20


குழு D

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இடம் – P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

லங்கன் கிரிக்கெட் கழகம் – 135/5 (20) – ஷானக்க ருவன்சிரி 54*, உமேஷ் லக்ஷான் 26*, அமில அபொன்சோ 3/20

றாகம கிரிக்கெட் கழகம் – 139/4 (18) – நிஷான் மதுஷ்க 51, உதார ஜயசுந்தர 29

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி 


கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை 

இடம் – டி சொய்ஸா மைதானம், மொரட்டுவ

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 148 (20) – சம்பத் பெரேரா 40, சுபுன் கவிந்த 3/24

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 115/8 (20) – யொஹான் டி சில்வா  27, மெதுஷ திலின 4/09, இர்சாட் உமார் 2/24

முடிவு – கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் 33 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<