Home Tamil முதல் போட்டியில் ஷானகவின் அணிக்கு தோல்வி

முதல் போட்டியில் ஷானகவின் அணிக்கு தோல்வி

166

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) எதிர்கால கிரிக்கெட் தொடர்களுக்கு இலங்கை வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்த அழைப்பு T20 தொடரின் இரண்டாவது போட்டியில் தசுன் ஷானக தலைமையிலான SLC கீரின்ஸ் அணியினை, சரித் அசலன்கவின் புளூஸ் அணி 32 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.

>> முதல் போட்டியில் வெற்றி பெற்ற SLC ரெட்ஸ் அணி

இரு அணிகளுக்கும் தொடரில் முதல் மோதலாக அமைந்த இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் திங்கட்கிழமை (08) இரவு ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புளூஸ் அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய புளூஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள் பெற்றது.

புளூஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஷேன் பண்டார இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 34 பந்துகளுக்கு 2 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 37 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் கீரின்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெப்ரி வென்டர்சய் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 123 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கீரின்ஸ் அணியினர் சுமிந்த லக்ஷான், டில்ஷான் மதுசங்க ஆகியோரின் அபார பந்துவீச்சு காரணமாக தொடக்கத்திலேயே தடுமாறியதோடு இறுதியில் 18.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 90 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவினர்.

கீரின்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்த அதன் தலைவர் தசுன் ஷானக்க அதிகபட்சமாக 37 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>> ஐ.சி.சி. இன் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக பிரபாத் ஜயசூரிய

மறுமுனையில் புளூஸ் அணிப்பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் சுமிந்த லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Blues
122/9 (20)

Greens
90/10 (18.3)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Dasun Shanaka b Nuwan Thushara 3 3 0 0 100.00
Sadeera Samarawickrama c Lakshan Sandakan b Binura Fernando 1 11 0 0 9.09
Charith Asalanka c Ramesh Mendis b Pathum Nissanka 23 14 3 0 164.29
Dhananjaya de Silva c Niroshan Dickwella b Jeffrey Vandersay  14 10 2 0 140.00
Ashen Bandara not out 37 34 2 1 108.82
Chamika Karunaratne c Lakshan Sandakan b Jeffrey Vandersay  0 3 0 0 0.00
Suminda Lakshan c Lakshan Sandakan b Binura Fernando 10 14 1 0 71.43
Pramod Madushan run out (Niroshan Dickwella) 1 2 0 0 50.00
Praveen Jayawickrama Jeffrey Vandersay  b Jeffrey Vandersay  0 4 1 0 0.00
Kasun Rajitha c Lakshan Sandakan b Jeffrey Vandersay  19 25 2 0 76.00
Dilshan Madushanka not out 0 0 0 0 0.00


Extras 14 (b 0 , lb 4 , nb 0, w 10, pen 0)
Total 122/9 (20 Overs, RR: 6.1)
Bowling O M R W Econ
Binura Fernando 4 1 23 1 5.75
Nuwan Thushara 4 0 26 1 6.50
Ramesh Mendis 2 0 13 1 6.50
Dasun Shanaka 1 0 13 0 13.00
Jeffrey Vandersay  4 0 12 3 3.00
Lakshan Sandakan 4 0 26 1 6.50
Dhananjaya Lakshan 1 0 5 1 5.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Kasun Rajitha b Suminda Lakshan 16 26 0 0 61.54
Niroshan Dickwella b Dhananjaya de Silva 0 2 0 0 0.00
Nuwanidu Fernando lbw b Dilshan Madushanka 0 3 0 0 0.00
Dinesh Chandimal c Charith Asalanka b Kasun Rajitha 11 11 0 1 100.00
Dhananjaya Lakshan b Dilshan Madushanka 1 3 0 0 33.33
Dasun Shanaka c Ashen Bandara b Suminda Lakshan 37 39 3 0 94.87
Ramesh Mendis st Sadeera Samarawickrama b Praveen Jayawickrama 9 9 0 0 100.00
Jeffrey Vandersay  b Praveen Jayawickrama 1 3 0 0 33.33
Binura Fernando run out (Ashen Bandara) 3 7 0 0 42.86
Lakshan Sandakan c Pramod Madushan b Chamika Karunaratne 1 6 0 0 16.67
Nuwan Thushara not out 7 3 0 1 233.33


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 90/10 (18.3 Overs, RR: 4.86)
Bowling O M R W Econ
Dhananjaya de Silva 1 0 3 1 3.00
Dilshan Madushanka 4 0 22 2 5.50
Praveen Jayawickrama 4 0 16 2 4.00
Kasun Rajitha 2 0 4 1 2.00
Chamika Karunaratne 2.3 0 16 1 6.96
Suminda Lakshan 4 0 22 2 5.50
Pramod Madushan 1 0 5 0 5.00



முடிவு – புளூஸ் அணி 32 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<