இலங்கை கிரிக்கெட் தேர்தல் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டது

174

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தேர்தலை பெப்ரவரி 7ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிமுறைகளில் காணப்படுகின்ற ஒருசில திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

துடுப்பாட்ட வீரர்களின் உதவியை எதிர்பார்க்கும் தினேஷ் சந்திமால்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால்…

முன்னதாக, இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் பெப்ரவரி 07ஆம் திகதி நடத்தப்பட இருந்தது. எனினும், புதிய விளையாட்டுத்துறை சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஒருசில திருத்தங்களை மேற்கொள்ளவும், இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளை விசாரணை செய்யவும் கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை இரண்டு வாரங்கள் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய விளையாட்டுத்துறை சட்டத்தின் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்புகளில் காணப்படுகின்ற பிழைகளை திருத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Photo Album – SLC Elections 2019/2020 – Jayantha Dharmadasa led group | Press Conference

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை பெப்ரவரி 21ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலளார் டபிள்யூ. சூலானந்த அறிவித்துள்ளார்.

ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

மேசன் தொழில் செய்பவருக்கு தச்சுத் தொழிலும், தச்சுத் …..

கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில், முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை வெளியிடுமாறு குறித்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டது.

Photo Album – SLC Elections 2019/2020 – Mohan De Silva led group | Press Conference

இதனையடுத்து தேர்தல் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கீழ் கொண்டுவருவதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் தொடர்பில் .சி.சியின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மூன்று தடவைகள் டுபாய் சென்று .சி.சியின் அவைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடி, தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தனர்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பதவியேற்ற புதிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். பின்னர், இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பது குறித்து பேசுவதற்காக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் கடந்த 27ஆம் திகதி டுபாய்க்குச் சென்றிருந்தனர்.

எனினும், சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஜனநாயக முறையில் நிர்வாக சபையொன்றை நியமிக்கும் நோக்கில் கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துமாறு மீண்டும் அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இலங்கை கிரிக்கெட் தேர்தலில் அர்ஜுன களமிறங்க திலங்க விலகல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக ஜயந்த …

இதேவேளை, இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் குறித்த இறுதி அறிவிப்பை தேர்தல் செயற்குழு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதில் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால தரப்பில் மொஹான் டி சில்வா மற்றும் சம்மி சில்வாவும், ரணதுங்க தரப்பில் கே. மதிவாணன் மற்றும் ஜயந்த தர்மதாச ஆகியோரும் போட்டியிடவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்தி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பாவிட்டால் இலங்கையின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவ்வாறு இலங்கைக்கு தடைவிதிக்கப்பட்டால் 2020 ஜுலை வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்கவிருக்கும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்காமல் போகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<