அபார வெற்றியின் மூலம் பழிதீர்த்தது பாகிஸ்தான் ‘ஏ’ அணி

538
Sri Lanka A v Pakistan A

இலங்கை ‘ஏ’ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அதில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு விளையாடிய 4 நாட்கள் கொண்ட 1ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தற்போது இலங்கை ‘ஏ’ அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு 4 நாட்கள் கொண்ட 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.

இந்தப் போட்டி சனிக்கிழமை(10) வர்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின்நா ணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ‘ஏ’ அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ‘ஏ’ அணி 250/10 (69.5)

ரொஷேன் சில்வா – 57
உதார ஜயசுந்தர – 53
அஷான் பிரியன்ஜன் – 36
நிரோஷன் திக்வெல்ல – 35
மிர் ஹம்சா – 62/4
ஹசன் அலி – 70/3

பாகிஸ்தான் ‘ஏ’ அணி 461/8d (117)

சவுத் ஷகீல் – 86
முஹமத் ஹசன் – 73
முஹமத் நவாஸ் – 52
ஹசன் அலி 50*
சதப் கான் – 48
தனஞ்ஜய டி சில்வா – 28/2
விஷ்வ பெர்னாண்டோ – 104/2
லஹிரு கமகே 115/2

இலங்கை ‘ஏ’ அணி 358/10 (93.2)

தனஞ்ஜய டி சில்வா 88
அஷான் பிரியன்ஜன் 66
மினோத் பனுக்க 54*
ரொஷேன் சில்வா 40
ஹசன் அலி 67/4
சதப் கான் 89/4

பாகிஸ்தான் ‘ஏ’ அணி 148/2 (19.1)

பாபர் அசாம் 66*
சவுத் ஷகீல் 51*
விஷ்வ பெர்னாண்டோ 38/2

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 8 விக்கட்டுகளால் இலங்கை ‘ஏ’ அணியைத் தோற்கடித்ததோடு முதல் போட்டியில் அடைந்த தோல்வியை இந்த வெற்றியின் மூலம் பழிதீர்த்தது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்