ஓலிம்பிக் புலமைப்பரிசில் பட்டியலிலிருந்து விதூஷா, கயன்திகா நீக்கம்

195

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு சர்வதேச ஒலிம்பிக் பேரவை மற்றும் தேசிய ஒலிம்பிக் குழு ஆகியன இணைந்து வழங்குகின்ற இலங்கை வீரர்களுக்கான புலமைப்பரிசில் பட்டியலில் இருந்து பெண்களுக்கான முப்பாய்ச்சல் தேசிய சம்பியனான விதூஷா லக்ஷானி மற்றும் பெண்களுக்கான 1500 மீற்றர் தேசிய சம்பியனான கயன்திகா அபேரட்ன ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா முதல் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா வரை குறித்த இரண்டு வீராங்கனைகளுக்கும் மாதாந்தம் 670 அமெரிக்க டொலர்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்தது

எனினும், அண்மையில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்துக்கும், தேசிய ஒலிம்பிக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குறித்த இரண்டு வீராங்கனைகளின் கடந்த கால பெறுபேறுகள் திருப்தி அளிக்கும் விதமாக இருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது

இதன் காரணமாக அவர்களுக்கான புலமைப்பரிசிலை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

எதுஎவ்வாறாயினும், இலங்கை மெய்வல்லுனர் சங்கம் பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடைதாண்டல் தேசிய சம்பியனான நிலானி ரத்னாயக்க மற்றும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தேசிய சம்பியனான சுமேத ரணசிங்க ஆகிய இருவரது பெயர்களையும் மாற்றீடு வீரர்களாக முன்மொழிந்தது

Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140

எனினும், தேசிய ஒலிம்பிக் குழு நிலானி ரத்னாயக்கவுக்கு மாத்திரம் புலமைப்பரிசிலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது

அத்துடன், கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாமர பெரேராவும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு ஆறு வீரர்களுக்கு குறித்த புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்குவதற்கு தேசிய ஒலிம்பிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கால மதிப்பீடு மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

இதன்படி, பளுதூக்கல் வீரர் திலங்க பலகசிங்க (670 அமெ.டொலர்), ஜுடோ வீரர் சாமர தர்மவர்தன (1000 அமெ.டொலர்), நீச்சல் வீரர் மெத்திவ் அபேசிங்க (1000 அமெ.டொலர்), மல்யுத்த வீரர் சாமர பெரேரா (670 அமெ.டொலர்), மெய்வல்லுனர் வீராங்கனை நிலானி ரத்னாயக்க (670 அமெ.டொலர்) மற்றும் ஜப்பானில் வசித்து வருகின்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹனி உள்ளிட்ட ஆறு பேருக்கும் இந்தப் புலமைப்பரசில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<