டினோஷனின் சகலதுறை ஆட்டத்தோடு சென். ஜோன்ஸ் அணிக்கு வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் திஸ்ஸ மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

ஹேனகம மத்திய கல்லூரியிடம் தோல்வியடைந்த சென். ஜோன்ஸ் கல்லூரி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு…………..

திஸ்ஸ கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று (23) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற திஸ்ஸ மத்திய அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை யாழ் வீரர்களுக்கு வழங்கியது. 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்காக தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் சௌமியன் ஆகியோர் அரைச்சதங்கள் விளாசினர். இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு சென். ஜோன்ஸ் அணி தமது முதல் இன்னிங்ஸ் 73.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 285 ஓட்டங்கள் குவித்தது.

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பாக டினோஷன் 83 ஓட்டங்கள் எடுக்க, சௌமியன் 78 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம், திஸ்ஸ மத்திய கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக நிக்கில் சஷ்மிக்க 3 விக்கெட்டுக்கள் சாய்க்க, ரோஹன் சஞ்சய மற்றும் தனுஷ்க நிஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய திஸ்ஸ மத்திய கல்லூரி அணி 161 ஓட்டங்களை எடுத்தது. திஸ்ஸ மத்திய கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக ரொஹான் சஞ்சய 57 ஓட்டங்கள் குவிக்க, ஹர்ஷ மதுசங்க 54 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

மறுமுனையில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்திய தினோஷன் வெறும் 31 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், 124 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி எதிரணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 86 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

திஸ்ஸ மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் தனுக நிஷாட் மற்றும் ரோஹான் சஞ்சய ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சென். ஜோன்ஸ் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து திஸ்ஸ மத்திய கல்லூரி அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 212 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

Photos: St. John’s College, Jaffna vs St. Thomas’ College, Matale l U19 Cricket Tournament 2019/20

ThePapare.com | Murugaiah Saravanan | 20/12/2019 Editing and re-using images without permission of ThePapare.com…………….

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய சொந்த மைதான தரப்பினர் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் 146 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து போட்டியில் தோல்வியடைந்தது. 

திஸ்ஸ மத்திய கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக ரோஹான் சஞ்சய 51 ஓட்டங்கள் குவித்து போராட்டம் காண்பித்திருக்க, விதுஷன் 4 விக்கெட்டுக்களையும், டினோஷன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 285 (73.3) டினோஷன் 83, சௌமியன் 78, நிக்கில் சஹஸ்மிக்க  3/47, ரோஹான் சஞ்சய 2/65

திஸ்ஸ மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 161 (38.2) ரோஹான் சஞ்சய 57, ஹர்ஷ மதுசங்க 54, தினோஷன் 6/31

சென். மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 86 (24) தனுக நிஷாட் 4/14, ரொஹான் சஞ்சய 4/32

திஸ்ஸ மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) –  146 (35.1) ரோஹான் சஞ்சய 51, விதுஷன் 4/51, தினோஷன் 3/29

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 65 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<