Home Tamil இறுதி இளையோர் போட்டியிலும் இலங்கை அணிக்கு தோல்வி

இறுதி இளையோர் போட்டியிலும் இலங்கை அணிக்கு தோல்வி

140

பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான ஐந்தாவதும் கடைசியுமான இளையோர் ஒருநாள் போட்டியிலும் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை இளையோர் அணி தொடரை 4-0 என இழந்தது. 

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளையோர் அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையிலேயே சிட்டகொங்கில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் இன்று (19) களமிறங்கியது. 

இளையோர் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி வசம்

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19….

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இலங்கை அணியால் வீழ்த்த முடிந்தபோதும் மத்திய வரிசையை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 

மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த தௌஹீத் ஹிர்டோய் மற்றும் ப்ரான்டிக் நவ்ரோஸ் நபீல் 69 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு பங்களாதேஷ் அணிக்கு வலுச் சேர்த்தனர். நபீல் 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் ஹிர்டோய் நான்காவது விக்கெட்டுக்கு பர்வெஸ் ஹொஸைன் எமோனுடன் சேர்ந்து 100 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஹிர்டோய் 102 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

இதன்மூலம் பங்களாதேஷ் இளையோர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு சவால் கொடுக்க தவறிய நிலையில் ரொஹான் சஞ்சய 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 7 ஓட்டங்களை பெறுவதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள்

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ்….

எனினும் ஆரம்ப வீரர் மொஹமட் ஷமாஸ் மற்றும் ரவிந்து ரசன்த 3 ஆவது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நம்பிக்கை தந்தனர். எனினும் சிறப்பாக ஆடிவந்த ஸாஹிரா கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட விரர் ஷமாஸ் 38 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 

மறுபுறம் கல்கிஸ்ஸை, புனித தோமியர் கல்லூரியின் ரசன்த 92 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 84 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததை அடுத்து இலங்கை அணியில் எதிர்பார்ப்பு சிதறியது. 

இறுதியில் இலங்கை இளையோர் அணி 44.4 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

இலங்கை அணி இந்த சுற்றுப்பயணத்தில் ஆடிய இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது. 

Result


Sri Lanka U19
233/10 (44.4)

Bangladesh U19
283/7 (50)

Batsmen R B 4s 6s SR
Pritom Kumar lbw b Yasiru Rodrigo 1 4 0 0 25.00
Sajid Hossain Seam c Chilan Kalindu b Avishka Tharindu 21 42 1 1 50.00
Prantik Nawrose Nabil c Rohan Sanjaya b Dilum Sudheera 65 77 4 2 84.42
Tawhid Hridoy b Chamindu Wickramasinghe 111 102 3 5 108.82
Parvez Hossain c Thaveesha Abhishek b Rohan Sanjaya 38 57 2 1 66.67
Shamim Hossain run out (Avishka Perera) 1 2 0 0 50.00
Akbar Ali c Avishka Perera b Rohan Sanjaya 2 5 0 0 40.00
Avishek Das not out 24 12 1 2 200.00
Ashraful Islam not out 0 1 0 0 0.00


Extras 20 (b 0 , lb 3 , nb 2, w 15, pen 0)
Total 283/7 (50 Overs, RR: 5.66)
Fall of Wickets 1-2 (0.5) Pritom Kumar, 2-58 (12.6) Sajid Hossain Seam, 3-127 (24.5) Prantik Nawrose Nabil, 4-227 (42.4) Parvez Hossain, 5-230 (43.3) Shamim Hossain, 6-236 (44.5) Akbar Ali, 7-283 (49.5) Tawhid Hridoy,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 10 1 57 1 5.70
Chamindu Wickramasinghe 7 0 48 1 6.86
Rohan Sanjaya 10 0 57 2 5.70
Avishka Tharindu 3 0 21 1 7.00
Kavindu Nadeeshan 10 0 47 0 4.70
Dilum Sudheera 10 0 50 1 5.00


Batsmen R B 4s 6s SR
Mohammad Samaaz c & b Shamim Hossain 40 38 5 0 105.26
Chilan Kalindu c Shamim Hossain b Mohammad Shahin 0 1 0 0 0.00
Thaveesha Abhishek lbw b Avishek Das 4 5 1 0 80.00
Ravindu De Silva st Parvez Hossain b Tanzid Hasan 84 92 8 0 91.30
Nipun Dananjaya run out (Shamim Hossain) 21 35 1 0 60.00
Avishka Tharindu run out (Sajid Hossain Seam) 30 39 2 1 76.92
Chamindu Wickramasinghe lbw b Tanzid Hasan 0 1 0 0 0.00
Rohan Sanjaya c Akbar Ali b Shahin Alom 27 39 2 0 69.23
Dilum Sudheera not out 12 16 1 0 75.00
Kavindu Nadeeshan run out (Prantik Nawrose Nabil) 0 1 0 0 0.00
Yasiru Rodrigo run out (Pritom Kumar) 1 1 0 0 100.00


Extras 14 (b 0 , lb 1 , nb 0, w 13, pen 0)
Total 233/10 (44.4 Overs, RR: 5.22)
Fall of Wickets 1-2 (0.3) Chilan Kalindu, 2-7 (1.4) Thaveesha Abhishek, 3-94 (14.3) Mohammad Samaaz, 4-145 (25.6) Nipun Dananjaya, 5-173 (31.3) Ravindu De Silva, 6-173 (31.4) Chamindu Wickramasinghe, 7-213 (39.4) Avishka Tharindu, 8-229 (43.1) Rohan Sanjaya, 9-230 (43.5) Kavindu Nadeeshan, 10-233 (44.4) Yasiru Rodrigo,

Bowling O M R W Econ
Shahin Alom 8 0 46 2 5.75
Avishek Das 7 0 37 1 5.29
Tanzid Hasan 10 0 47 2 4.70
Shamim Hossain 5.4 0 44 1 8.15
Ashraful Islam 10 0 37 0 3.70
Prantik Nawrose Nabil 2 0 11 0 5.50
Tawhid Hridoy 2 0 13 0 6.50