சகல துறையிலும் பிரகாசித்த அசெல் சிகெரா: ஆனந்த கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி

253
SINGER U19 DIV I TOURNAMENT

இன்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான போட்டிகளில் கொழும்பு ஆனந்த கல்லூரி புனித பெனடிக்ட் கல்லூரியை 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் குருநாகல் மலியதேவ கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த நிலையில், முதல் இன்னிங்சுக்காக சொந்த மைதானத்தில் களமிறங்கிய மலியதேவ கல்லூரி 53.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

கூடிய ஓட்டங்களாக தமித சில்வா 86 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை நவீன் குணவர்தன 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி இன்றைய நாள் நிறைவின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்:

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 181 (53.1) – தமித சில்வா 86, தில்ஷான் கொல்லுரே 70, நவீன் குணவர்தன 5/55, சரண நாயக்கர 2/19, சவன் பிரபாஷ் 2/30

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 141/4 (29) – யஷான் விக்கிரமாராச்சி 44, இமேஷ் விரங்க 37, சவன் பிரபாஷ் 22*


புனித தோமியர் கல்லூரி, கல்கிசை எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

பாணதுறை பொது கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய நாள் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி, ரவிந்து கொடிதுவக்கு பெற்றுக்கொண்ட 119 ஓட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் முதல் இன்னிங்சை நிறுத்திக்கொண்டது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித சில்வெஸ்டர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட்டுகளுக்கு 67 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டிச் சுருக்கம் :

புனித தோமியர் கல்லூரி, கல்கிசை (முதல் இன்னிங்ஸ்): 318/7d (59.2) – ரவிந்து கொடிதுவக்கு 119, சிதார அப்புஹின்ன 56, ரொமேஷ் நல்லபெரும 36, மனுஜ பெரேரா 3/51, துசித் சொய்சா 2/60

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 67/3 (23)


ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் ருஹுனு பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய கேசர நுவந்த 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதையடுத்து களமிறங்கிய புனித செர்வாடியஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் நிறைவுற்றது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்): 112 (39.2) – சசித லியனகே 41, கேசர நுவந்த 5/26, இசுறு உதயங்க 3/13

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்): 133/8 (53) – சசிக துல்ஷான் 51, திலான் பிரஷான் 35, பிரேமுக்க கயஷான் 2/20


இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ

இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டி இன்றைய நாள் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றாலும் இசிபதன கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துகொண்டது.

முதல் இன்னிங்சுக்காக இசிபதன கல்லூரி பெற்றுக்கொண்ட 305 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய பிரின்ஸ் பெர்னாண்டோ மற்றும் சஞ்சய பெர்னாண்டோ அரைச் சதம் கடந்தனர். அதேநேரம் லஹிரு தில்ஷான் 60 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

44 ஓட்டங்களால் முன்னிலை அடைந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இசிபதன கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 305 (74.5) – பத்தும்  நிஸ்ஸங்க 135, கழன பெரேரா 41, ஹர்ஷ ரத்னாயக்க 28, ஹேஷான்  பெர்னாண்டோ 27, மலீஷ ரூபசிங்க 27, அயன சிறிவர்தன 23, கௌமல் நாணயக்கார 5/110, திலான் நிமேஷ் 4/85

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 261 (80.5) – பிரின்ஸ் பெர்னாண்டோ 51, சஞ்சய பெர்னாண்டோ 59*, திலான் நிமேஷ் 46, அவிந்து பெர்னாண்டோ 40, லஹிரு தில்ஷான் 6/60

இசிபத்தன கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 90/6 (29.1) – கழன பெரேரா 54, சவிந்து பீரிஸ் 3/43, கௌமல் நாணயக்கார 2/39


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு, பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்தது. வினுள் குணவர்தன , சந்துஷ் குணதிலக்க மற்றும் ஷாலித் பெர்னாண்டோவின் அரைச் சதங்களின் உதவியுடன் புனித பேதுரு கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 282/6d (78) – வினுள்  குணவர்தன 61, சந்துஷ் குணதிலக்க 53, ஷாலித் பெர்னாண்டோ 52, அனிஷ்க பெரேரா 39, மனேல்கா டி  சில்வா 31*, ஷிவான் பெரேரா 23*, கிஹான் அச்சிந்த 2/42, எம் அல்பார் 2/34

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 8/0 (2)


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

புனித பெனடிக்ட் கல்லூரி பெற்றுக்கொண்ட 149 ஓட்டங்களுக்கு பதிலாக முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய ஆனந்த கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்று 108 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய அசேல் சிகெரா 105 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அதனையடுத்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி 55.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதிரடியாக பந்து வீசிய திலீப ஜயலத் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஆனந்த கல்லூரி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்:

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 149 (60.2) – திணித்த பஸ்நாயக்க 38, மகீஷ் தீக்ஷன 33, சம்மு அஷான் 2/14, அசெல் சிகெரா 2/18, சுபுன் வாரகொட 2/22, திலீப ஜயலத் 2/43

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 257/9d (53.4) – அசேல் சிகெரா 105, சஹன் சூரவீர 59, சம்மு அஷான் 28, லஹிரு ஹிரண்ய 24, கவீஷ ஜயதிலக்க 4/76, சலன சங்கல்ப 2/34, மஹீஷ் தீக்ஷன 2/58

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 153 (55.3) – டிலான் சதுரங்க 45*, கவீஷ ஜயதிலக்க 30, தீலிப ஜயலத் 4/26 சுபுன் வாரகொட 2/22, அசேல் சிகெரா 2/29

ஆனந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 46/1 (5) – கவிஷ்க அஞ்சுல 32*

போட்டி முடிவு: ஆனந்த கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி


தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு

டி எஸ் சேனநாயக்க கல்லூரி பெற்றுக்கொண்ட 184 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய தர்மசோக கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 313 ஓட்டங்களை பெற்றதோடு 129 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துகொண்டது. சிறப்பாக துடுப்பாடிய ரவிந்து ரோஷந்த 124 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அதனையடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய டி எஸ் சேனநாயக்க கல்லூரி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

டி எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 184 (47.2) – ஷெஷாட் அமீன் 37, மெத்சித் ஜயமன்ன 30, முதித்த லக்ஷான் 50, லொஹான் டி சொய்சா 3/33, கவிந்து அதீஷன் 3/41, உஷான் இமான்த 2/40

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்): 313 (73.5) – ரவிந்து ரோஷந்த 124, கசுன் மதுரங்க 40, லொஹான் டி சொய்சா 30, உஷான் இமந்த 31, கவிந்து நதீஷன் 27*, ஹர்சஜித் ரோஷன் 21, ஷெனெல் டேனியல் 6/85, முத்தித லக்ஷான் 2/93

டி எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 26/3 (7.5)

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. தர்மசோக கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் மஹிந்த கல்லூரி, காலி

மஹாநாம கல்லூரி பெற்றுக்கொண்ட 178 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய காலி மஹிந்த கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. கூடிய ஓட்டங்களாக ரவிந்து ஹன்சிக 39 ஓட்டங்களை பதிவு செய்தார். சிறப்பாக பந்து வீசிய பத்தும் போத்தேஜூ மற்றும் ஹஷான் சந்தீப தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய மஹாநாம கல்லூரி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்:

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 178 (47.3) – தேஷான் ஹெட்டியாராச்சி 51, மலிந்து மதுரங்க 28, கவிந்து முனசிங்க 21, கெவின் கெமித 3/34, நிபுன் மலிங்க 2/36, பசிந்து தேஷான் 2/12

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 147 (73.4) – கவிந்து எதிரிவீர 46, வினுர ஹிரஞ்சித் 28, பத்தும் போத்தேஜூ 2/16, ஹஷான் சந்தீப 2/26

மஹாநாம கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 282/8 (57) –  நிதுக்க வெலிகல 86, பவன் ரத்நாயக்க 71, கவிந்து முனசிங்க 43, ரவிந்து ஹன்சிக 4/77

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய

புனித மரியார் கல்லூரி பெற்றுக்கொண்ட 177 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய தர்மபால கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த புனித மரியார் கல்லூரி இரண்டாவது இன்னிங்சுக்காக 251 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்:

புனித மரியார் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்): 177 (63.2) – சஜீவ ரஞ்சித் 56, சுஜித் குமார 24, மஹிம வீரக்கோன் 4/48, கலிந்து சமரசிங்க 2/35, தில்ஷான் டி சில்வா 2/31

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்): 129 (46.4) – மலித் சந்தகெளும் 72, தமிந்த சந்திரசிறி 3/06, லசித் உடகே 2/39

புனித மரியார் கல்லூரி, கேகாலை (இரண்டாம் இன்னிங்ஸ்): 251 (66.4) – கஜித கொட்டுவகோட 109, சஜீவ ரஞ்சித் 53, சமிந்து சமரசிங்க 5/115, தில்ஷான் டி சில்வா 4/61,

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித மரியார் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி