பார்சிலோனாவில் இணைந்தார் விடல்

217
@AFP

சிலி கால்பந்து அணியின் மத்தியகள வீரர் ஆர்டுரோ விடல் மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் பயேர்ன் முனிச் கழக அணியில் இருந்து ஸ்பெயினின் பலம்மிக்க பார்சிலோனா கழகத்தில் திங்கட்கிழமை (06) உத்தியோகபூர்வமாக இணைந்தார்.

விரக்தியுடன் திடீர் ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி வீரர் ஓசில்

ஜெர்மனியின் 29 வயதுடைய மத்தியகள வீரர் மெசட் ஓசில்…

விடல், லா லிகா சம்பியனான பார்சிலோனாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். எனினும், அவரது ஒப்பந்தத் தொகை வெளியிடப்படவில்லை. அது 20 தொடக்கம் 30 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்பொழுது 31 வயதுடைய விடல் இன்டர் மிலான் கழகத்துடன் இணைவதற்கு நெருங்கிய போதே கடைசி நேரத்தில் அவரை பார்சிலோனா தனதாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  

பயேர்ன் முனிச் கழகத்தில் ஆடிய மூன்று ஆண்டுகளில், விடல் அந்த கழகத்திற்காக ஜெர்மனி கிண்ணம் ஒன்றையும் இரு ஜெர்மனி சுப்பர் கிண்ணங்களையும் வென்று கொடுத்துள்ளார்.

ஆர்டுரோவின் பங்களிப்புக்கு நன்றி கூறுவதோடு, ஸ்பெயினில் சிறந்து செயற்பட அவரை வாழ்த்துகிறோம் என்று பயேர்ன் முனிச் கழகம் தனது வீரருக்கு பிரியாவிடை தெரிவித்தது.  

உலகக் கால்பந்தில் மிகச்சிறந்த மத்தியகள வீரர்களில் ஒருவராக விளங்கிய விடல், பயேர்ன் முனிச்சில் இணைவதற்கு முன்னர் இத்தாலியின் ஜுவண்டஸ் கழகத்திற்காக நான்கு பருவங்களிலும் நான்கு சீரி A சம்பியன் பட்டங்களை வென்றார்.  

சிலி அணிக்காக 100 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் அந்த அணி 2015இல் கோபா அமெரிக்கா கிண்ணத்தை வெல்லவும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஸ்பெயினின் அதிர்ச்சித் தோல்வியோடு விடைபெறும் இனியஸ்டா

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரஷ்யாவிடம்…

இந்நிலையில் திங்களன்று பார்சிலோனா கழகத்திற்கு சென்ற விடலுக்கு அந்த கழகத்தின் துணைத் தலைவர் ஜோர்டி டெஸ்டர், அவரது புதிய பார்சிலோனா ஜெர்சியை வழங்கினார்.   

இதனைத் தொடர்ந்து அவர் தனது மகன் அலொன்சோவுடன் இணைந்து நூற்றுக்கணக்கான பார்சிலோனா ஆதரவாளர்கள் முன் முதல்முறை அந்த அணிக்காக அதன் நியூ கேம்ப் மைதானத்தில் கால் பதித்தார்.  

மூன்று ஆண்டு ஒப்பந்தக் காலத்தில் நாம் ஆடும் அனைத்து தொடர்களிலும் எம்மால் வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். லியோனல் மெஸ்ஸி, லுவிஸ் சுவாரஸ், செர்கியோ பஸ்குவட்ஸ் ஆகிய சிறந்த வீரர்களுடன் ஆடுவதை ஒட்டி நான் உற்சாகம் அடைந்துள்ளேன் என்று விடல் குறிப்பிட்டார்.

இந்த பருவத்தில் பார்சிலோனா தனது முன்னணி வீரர்களான அன்ட்ரெஸ் இனியஸ்டா மற்றும் பேரின்ஹோவை இழந்திருக்கும் நிலையில் விடலின் வருகை அந்த அணியின் மத்திய களத்தில் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<