மொவீன் சுபசிங்கவின் அதிரடி பந்து வீச்சில் 153 ஓட்டங்களுக்கு சுருண்ட செபஸ்டியன் கல்லூரி

199
Under 19 Rpoundup

பாடசாலை கிரிக்கெட் அணிகள் கலந்துகொள்ளும் 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகளுக்காக இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைபெற்றன.

கண்டி புனித அந்தோனியர் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

கொழும்பு ஆனந்த கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகிய இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்த கல்லூரி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய அந்தோனியர் கல்லூரி, திலீப்ப ஜயலத்தின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 39 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து  118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மொஹமத் அல்பர் 47 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த அதே நேரம், நேர்த்தியாக பந்து வீசிய திலீப்ப ஜயலத் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆனந்த கல்லூரி, முதல் நாள் ஆட்டநேர நிறைவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி: 118 (39) – மொஹமத் அல்பர் 47, சுனேர ஜயசிங்க  28, முஹமத் அப்சர்  20, திலீப்ப  ஜயலத் 4/16, கவிஷ்க அஞ்சுல 2/6, சுபுன் வாரகோட 2/40

ஆனந்த கல்லூரி: 81/1 (16,3) கவிந்து  கிம்ஹென 27, சஹன் சுரவீர 31*


கொழும்பு றோயல் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய றோயல் கல்லூரி அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக ருணுக ஜெயவர்தன 33 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாகப் பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு றோயல் கல்லூரி : 99/3 (32,3) – ருணுக ஜெயவர்தன 33, மதரா தல்துவ 34


புனித பேதுரு கல்லூரி எதிர் காலி, ரிச்மன்ட் கல்லூரி

கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் முதல் நாளாக ஆரம்பித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மன்ட் கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணி, அவிந்து தீக்ஷனவின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு, 9 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.

தனியாளாக போராடிய சந்தோஷ் குணதிலக்க 72 ஓட்டங்களை பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அதேநேரம், அதிரடியாக பந்து வீசிய அவிந்து தீக்ஷன 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு  கல்லூரி: 181/9 (92) -சந்தோஷ் குணதிலக்க 72, சிவன் பெரேரா 21, அவிந்து தீக்ஷன5/65, தனஞ்சயன் 2/41, ரவிஷ்க விஜசிரி 2/35


மொறட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

கொழும்பு வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய புனித செபஸ்டியன் கல்லூரி, நிமேஷ் பண்டாரவின் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 34.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மொவீன் சுபசிங்கவின் அதிரடி பந்து வீச்சில் விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களுக்கு இழந்திருந்த நிலையில் களமிறங்கிய நிமேஷ் பண்டார, சிறப்பாக துடுப்பாடி 76 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். மறுமுனையில், அதிரடியாக பந்து வீசிய சகலதுறை ஆட்டக்காரர் மொவீன்  சுபசிங்க 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லி கல்லூரி அணி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 48 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து 1௦7 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி: (34.1) நிமேஷ் பண்டார 76, மலிந்த பீரிஸ் 41, ருசிக்க சுபசிங்க 6/43, தான்கல 3/25, மொவீன்  

வெஸ்லி கல்லூரி: 107/6 (48) ஷமோத் அதுலமுதலாளி  28, மொவீன்  சுபசிங்க 31 *

இந்த அனைத்துப் போட்டிகளினும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.