மீண்டும் ஐ.சி.சி. இன் உறுப்பினராக மாறும் ஜிம்பாப்வே, நேபாள் அணிகள்

122
Zimbabwe
@AFP

மூன்று மாத தடைக்கு பின்னர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) மீண்டும் தமது அங்கத்துவர்களில் ஒருவராக அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை அந்த நாட்டின் கிரிக்கெட் விளையாட்டையும் பாதித்ததை அடுத்து, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் ஐ.சி.சி. உறுப்புரிமை கடந்த ஜூலை மாதம் இரத்துச் செய்யப்பட்டது. 

மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய பயிற்சியாளராக பில் சிம்மோன்ஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமை..

இந்த இரத்து காரணமாக, கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு தெரிவாக தவறியிருந்த ஜிம்பாப்வே அணிக்கு, ஐ.சி.சி. நடாத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அனைத்திலும் விளையாட தடைவிதிக்கப்பட்டது. 

எனினும், தற்போது இந்த தடை நீங்கியிருப்பதால் ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியுமாக இருக்கும். இவ்வாறாக, தடை நீங்கிய நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி விளையாடும் ஐ.சி.சி. இன் முதல் கிரிக்கெட் தொடராக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் அமைகின்றது.  

எனினும், இந்த தடைநீக்கம் சற்று தாமதமாக வந்திருக்கும் காரணத்தினால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை துரதிஷ்டவசமாக இழந்திருக்கின்றது.  

T20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் இந்த மாத நடுப்பகுதியில் இருந்து, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த தொடரில் 14 நாடுகளின் அணிகள் பங்குபெறவுள்ளதோடு, ஜிம்பாப்வேயின் இடத்தினை நைஜீரிய கிரிக்கெட் அணி பிரதியீடு செய்யவுள்ளது.  

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம்

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இடையிலான..

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தனது உறுப்புரிமையினை மீண்டும் பெற்றது தொடர்பில் ஐ.சி.சி. இன் தலைவரான சஷாங்க் மனோகர், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.  

“ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஐ.சி.சி. உறுப்பினர் பதவியினை மீளப்பெற்றுக்கொள்ள அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் எடுத்த முயற்சிகளுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” 

”அவர் (விளையாட்டு அமைச்சர்) தெளிவான எண்ணத்துடன் இருப்பதுடன்,  ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு போதுமான ஆதரவினை வழங்கவும் விருப்பத்துடன் காணப்படுகின்றார். இன்னும், அவர் ஐ.சி.சி. இன் விதிமுறைகளுக்கும் ஒத்துழைப்பதாக கூறியிருக்கின்றார்.”

ஐ.சி.சி. இன் தடைக்காலத்திற்குள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் ஜிம்பாப்வே அணி, டெஸ்ட் போட்டி ஒன்றில் கடைசியாக 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திலேயே ஆடியிருந்தது.   

அதேநேரம், ஜிம்பாப்வே போன்று அரசியல் தலையீடுகளினால் கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.சி.சி. இன் உறுப்புரிமையினை இழந்த நேபாளத்திற்கும் ஐ.சி.சி. மீண்டும் உறுப்புரிமையினை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<