மகளிர் IPL தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக டாடா நிறுவனம்

129
Tata Group bags title rights of WPL

இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) T20 தொடரினை அடுத்து மகளிர் ஐ.பி.எல். தொடரின் (WPL) பிரதான அனுசரணையாளர்களாகவும் டாடா குழுமம் மாறியிருக்கின்றது.

>> ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை A கிரிக்கெட் அணி

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த ஆண்டு (2022) முதல் ஆடவர் ஐ.பி.எல். தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் WPL எனப் பெயரிடப்பட்டுள்ள மகளிர் ஐ.பி.எல். தொடரும் இந்த ஆண்டு முதல் புதிதாக நடைபெறுகின்றது.

மொத்தம் ஐந்து அணிகள் பங்குபெறும் இந்த WPL தொடரின் வீராங்கனைகள் ஏலம் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்றதோடு, தொடரின் தொலைக்காட்சி உரிமத்தினை Viacom 18 நிறுவனம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் WPL தொடரின் பிரதான அனுசரணையாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்புக்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் (BCCI) வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறாக விடயங்கள் இருந்த நிலையிலையே டாடா குழுமம் WPL தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக மாறியிருக்கின்றது. எனினும் பிரதான அனுசரணைக்காக வழங்கப்பட்ட பணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

டாடா குழுமம் மகளிர் WPL தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக மாறியிருக்கும் விடயத்தினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் ஜெய் சாஹ் தனது ட்விட்டர் கணக்கு வாயிலாக வெளியிட்டிருக்கின்றார்.

அதேவேளை WPL தொடரின் முதல் பருவகாலத்திற்கான போட்டிகள் மார்ச் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<