சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இன்று (26) மூன்று போட்டிகள் நிறைவுற்றன. இதில் புனித அலோசியஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியில் கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.
புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி
கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி, தங்களது சொந்த மைதானத்தில் புனித அலோசியஸ் கல்லூரியை எதிர்கொண்டு இன்னிங்ஸ் மற்றும் மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்றது.
இங்கிலாந்துடனான T20 போட்டியிலிருந்து விலகும் அகில தனன்ஜய, குசல் பெரேரா
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித அலோசியஸ் கல்லூரி முதலில் துடுப்பாட தீர்மானித்து, 31.3 ஓவர்களில் வெறும் 83 ஓட்டங்களுக்கு சுருண்டது. அலோசியஸ் கல்லூரி சார்பில் ஹசிந்து கிம்ஹான அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் டில்மின் ரத்னாயக்க 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி அணி, 39 ஓவர்களில் 152 ஓட்டங்களை பெற்றது. டியோன் பெர்னாண்டோ அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், தெவின் எரியகம 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மனுஷ்க சமித் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 69 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த புனித அலோசியஸ் கல்லூரி, மீண்டும் 66 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்படி கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் வென்றது. பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தய டெலோன் பீரிஸ் இம்முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 83 (31.3) – ஹசிந்து கிம்ஹான 21, டில்மின் ரத்னாயக்க 6/4
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 152 (39) – டியோன் பெர்னாண்டோ 42, தெவின் எரியகம 24, மனுஷ்க சமித் 33
புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 66 (31) – சந்தீப் நிசன்ஹ 20, டெலோன் பீரிஸ் 22/5
முடிவு – புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் வெற்றி
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் மஹிந்த கல்லூரி, காலி
புனித ஜோசப் கல்லூரி அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட காலி மஹிந்த கல்லூரி அணி, முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித ஜோசப் கல்லூரி அணி செவோன் டேனியலின் 68 ஓட்டங்கள் உதவியுடன் 223 ஓட்டங்களை குவித்தது. இவருக்கு அடுத்தபடியாக ஜொஹன்னே டி சில்வா 38 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் சுபானு ராஜபக்ஷ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய மஹிந்த கல்லூரி அணி வினுர டுல்சாரவின் அற்புத சதம் அடங்கலாக 296 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. வினுர டுல்சார 157 ஓட்டங்களையும், நிபுன் மாலிங்க 40 ஓட்டங்களையும் பெற, மிரங்க விக்ரமகே 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாம் போட்டியை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்த இலங்கை இளம் அணி
தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 223 (56.5) – செவோன் டேனியல் 68, ஜொஹன்னே டி சில்வா 38, சுபானு ராஜபக்ஷ 44/3
காலி மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 296/7d (80.2) – வினுர டுல்சார 157, நிபுன் மாலிங்க 40, மிரங்க விக்ரமகே 97/2
புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 34/2 (8) – பசான் பிரசங்கொட 2/17
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. மஹிந்த கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி
டி மெசனொட் கல்லூரி, கந்தானை எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
கொழும்பு பேதுரு கல்லூரி தங்களது சொந்த மைதானத்தில், கந்தானை டி மெசனொட் கல்லூரியை எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களை குவித்தது. இதில் செனேஷ் பெர்னாண்டோ 68 ஓட்டங்களையும், நதுன் டுல்ஷான் 33 ஓட்டங்களையும் பெற, பந்து வீச்சில் சந்துஷ் குணதிலக 5 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 36.5 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பேதுரு கல்லூரி சார்பில் அதிகபட்சமாக ஷிவான் பெரேரா 40 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் அசித சில்வா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த டி மெசனொட் கல்லூரி ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற, அந்த அணிக்கு முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களால் வெற்றி வழங்கப்பட்டது. டி மெசனொட் கல்லூரி சார்பில் சாலிய ஜுட் மற்றும் நிம்ன பெர்னாண்டோ ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ருவின் செனவிரத்ன 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
டி மெசெனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்) – 163 (53.3) – செனேஷ் பெர்னாண்டோ 68 , நதுன் டுல்ஷான் 33, சந்துஷ் குணதிலக 5/6
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 117 (36.5) – ஷிவான் பெரேரா 40, அசித சில்வா 21/3
டி மெசெனொட் கல்லூரி, கந்தானை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 125/5 (50) – சாலிய ஜுட் 34, நிம்ன பெர்னாண்ட்ஸோ 34, ருவின் செனவிரத்ன 48/2
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. டி மெசெனொட் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<