சுதீர, திஸரவின் நிதான ஆட்டத்தால் வலுப்பெற்ற தேவபதிராஜ கல்லூரி

146

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (21) நடைபெற்றன. இதில் ஒரு போட்டிகள் மழைக்கு மத்தியில் சமநிலையில் முடிவுற்றன.

தேவபதிராஜ கல்லூரி, ரத்கம எதிர் பெனடிக் கல்லூரி, கொழும்பு

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தேவபதிராஜ கல்லூரி அணியினர், பெனடிக் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தனர்.

சகலதுறை ஆட்டத்தால் புனித தோமியர் அணிக்கு இலகு வெற்றி

தேவபதிராஜ கல்லூரி அணிக்காக சுதீர வீரரத்ன 48 ஓட்டங்களையும், திசர டில்ஷான் 35 ஓட்டங்களையும் குவித்து தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தனர்.  

அத்துடன், பெனடிக் கல்லூரி அணியில் திறமையை வெளிக்காட்டிய மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தேவபதிராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 171/7 (70) சுதீர வீரரத்ன 48, திஸர டில்ஷான் 35*, இருஷ்க திமிர 30, மஹீஷ் தீக்ஷன 3/52


தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

கண்டி தர்மராஜ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது.

நேற்று (24) ஆரம்பாகிய இப்போட்டிக்கு மழை குறுக்கிட முதல் நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டது.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் …

இந்த நிலையில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தர்மபால கல்லூரி அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தர்மபால கல்லூரி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அஷேன் எகொடகே ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும், அமில தயனக 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்

பந்துவீச்சில் உபேன்திர வர்ணகுலசூரிய 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியின் ஆட்டத்துடன் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 141/5 (42) – அஷேன் எகொடகே 41*, அமில தனன்ஞய 30, சன்சனா லங்கா 23, உபேந்திர வர்ணகுலசூரிய 2/33

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க