இந்திய டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

45
BANGLADESH CRICKET BOARD

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிற்கான 16 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

>>ஓசத, இசிதவின் பிரகாசிப்புகளுடன் தென்னாபிரக்காவை வீழ்த்திய இலங்கை!<<

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்ததாக இந்தியாவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட விளையாடவிருக்கின்றது 

.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் (19) ஆரம்பமாகும் நிலையில் பங்களாதேஷ் அணியானது தமது குழாத்தில் உபாதைக்குள்ளான இளம் வேகப்பந்துவீச்சாளரான சொரிபுல் இஸ்லாமிற்கு ஓய்வு வழங்கியுள்ளது. 

இதேவேளை சொரிபுல் இஸ்லாமின் பிரதியீடாக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜாக்கேர் அலி பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் முதன் முறையாக இணைக்கப்பட்டிருக்கின்றார். இவர்கள் தவிர பங்களாதேஷின் டெஸ்ட் குழாம் அனுபவ வீரர்கள் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

பங்களாதேஷ்இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெறுவதோடு, இரண்டாவது போட்டி கான்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

பங்களாதேஷ் குழாம் 

நஜ்முல் ஹொசைன் (தலைவர்), மஹ்முதுல் ஹசன், ஸாகிர் ஹஸன், சட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், சகீப் அல் ஹசன், லிடன் குமார் தாஸ், மெஹிதி ஹஸன், தய்ஜூல் இஸ்லாம், நயீம் ஹஸன், நஹீட் ரனா, ஹஷன் மஹ்மூத், தஸ்கின் அஹ்மட், சையத் காலேத் அஹ்மட், ஜாகேர் அலி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<