பங்களாதேஷ் T20I அணியின் தலைவரான நஜ்முல் ஹொசைன் ஷன்டோ குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) தெரிவித்துள்ளது.
>>பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் குழாம் அறிவிப்பு<<
தென்னாபிரிக்க அணியுடனான தொடர் நிறைவுக்கு வந்ததன் பின்னர், நஜ்முல் ஹொசைன் ஷன்டோ தனக்கு T20I அணித் தலைவர் பதவியில் விருப்பமின்மை இருப்பதனை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவித்திருந்த நிலையிலையே நஜ்முல் ஹொசைன் ஷன்டோவின் பதவி விலகலும் நடைபெற்றிருக்கின்றது.
எனினும் பங்களாதேஷ் அணியினை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நஜ்முல் தொடர்ந்து வழிநடாத்துவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி புதிய T20I அணித்தலைவர் ஒருவரினை இன்னும் அறிவிக்காத போதிலும் லிடன் தாஸ் குறிப்பிட்ட பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிடன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் தரப்பு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20I தொடரினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து 3-0 என அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<