ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றாவது இடம்

Asian Youth Netball Championship 2023

126

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இளையோர் அணி மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

ஹொங் கொங் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இலங்கை அணி 46-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியினை பதிவுசெய்தது.

ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் அரையிறுதியில் இலங்கை

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் காற்பகுதியை ஹொங் கொங் அணி 11-10 என கைப்பற்றி இலங்கை அணிக்கு சவால் கொடுத்தது.

முதல் காற்பகுதி தோல்வியின் பின்னர் மீண்டும் பிரகாசிப்புக்கு வந்த இலங்கை இளையோர் அணி 11-6 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது. எனவே முதல் பாதியில் 21- 17 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆரம்பித்த மூன்றாவது காற்பகுதியில் இரண்டு அணிகளும் சிறப்பாக ஆட, இலங்கை அணி 13-10 என்ற புள்ளிகள் கணக்கிலும், நான்காவது காற்பகுதியில் 12-05 என்ற புள்ளிகள் கணக்கிலும் வெற்றிபெற்று தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

மலேசியா எதிர் இலங்கை (அரையிறுதிப்போட்டி)

மலேசியா அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இலங்கை இளையோர் அணி 77-36 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்தியிருந்த மலேசிய அணி முதல் இரண்டு காற்பகுதிகளையும் 16-6 மற்றும் 21-08 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி முதல் பாதியில் 37-14 என முன்னிலைப்பெற்றது.

தொடர்ந்து ஆரம்பித்த மூன்றாவது காற்பகுதியில் 19-11 மற்றும் நான்காவது காற்பகுதியில் 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிகளை பதிவுசெய்த மலேசிய அணி 77-36 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இலங்கை அணியை பொருத்தவரை பாஷி உடகெதர 25 முயற்சிகளில் 22 புள்ளிகளை அதிகமாக பெற்றுக்கொடுத்ததுடன், டில்மினி விஜேநாயக்க 12 முயற்சிகளில் 11 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<