இம்மாதம் 09ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் வடக்கின் பெரும் சமரை முன்னிட்டு ThePapare.com நேர்காணல் ஒன்றை நடத்தியது.

அந் நேர்காணலில் இருந்து சில விடயங்கள உங்களுக்காக

வடக்கின் பெரும் சமரில் 36ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா சென் ஜோன்ஸ்?

அதிகமான வீரர்கள் துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டிலும் சாதிக்கக்கூடிய சகலதுறை வீரர்களாக இருப்பது சென் ஜோன்ஸ் அணியின் நம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்கின்றது…

கே- உங்களுடைய கிரிக்கெட் பிரவேசம் மற்றும் பள்ளிக் கால கிரிக்கெட் அனுபவங்கள் எவ்வாறானதாக இருந்தது?

1964இல் ஸ்ரான்லிக் கல்லூரியில் கிரிக்கெட் ஆரம்பமானது. அதுவே கிரிக்கெட்டினுள்ளே எனது முதல் பிரவேசமாய் அமைந்தது. அதே ஆர்வத்துடன் 1965ஆம் ஆண்டில் யாழ் மத்திய கல்லூரியில் இணைந்து ஜெயரட்ணம் அவர்களின் கீழ் பயிற்சிகளை ஆரம்பித்தேன். 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் யாழ் மத்திக்கு கிரிக்கெட் ஆடினேன். அதிலும் 1966 இல் வடக்கின் பெரும் சமரில் சிறந்த பந்து வீச்சாளர் விருதினைப் பெற்றிருந்தேன். அத்தோடு அவ்வருடத்தில் டோனால்ட் கணேசகுமார் அவர்களுடன் இணைந்து யாழ் மாவட்ட அணியின் ஆரம்ப பந்து வீச்சாளராகவும் செயற்பட்டிருந்தேன்.

[rev_slider dfcc728]

கே: கிரிக்கெட்டை சிறப்பாக ஆடுவதற்கு எதனை அவசியமாகக் கருதுகின்றீர்கள்?

கிரிக்கெட் எனது உயிர் போன்றது. கிரிக்கெட் ஆடுவதற்கு என்று பயிற்சி முக்கியம். ஒரு போதும் நான் பயிற்சிக்கு நேரம் தவறியதில்லை.

கே: தங்களுடைய கழக மட்ட அனுபவம் எவ்வாறிருந்தது?

நான் ஒரு வருடம் புகையிரத சேவை அணியிலும் 12 வருடங்கள் பொலிஸ் சேவை அணியிலும் கிரிக்கெட் ஆடினேன். 1988இல் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து சென்றஸைட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு ஆடினேன்.

கே: பயிற்றுவிப்பாளராக தங்களின் பயணம் தொடர்பாக…

1998ஆம் ஆண்டு, கொழும்பு சென்ற யாழ். மாவட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டேன். 2001-2004 வரை யாழ். மாவட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தேன். 2006இல் வடக்குகிழக்கு துடுப்பாட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

மலேசியா சென்ற யாழ். மாவட்ட அணியின் பயிற்றுனராக செயற்பட்டு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தேன். 2009ஆம் ஆண்டு வடக்குகிழக்கு மாகாண பெண்கள் அணியை வழிநடாத்தி tape ball சுற்றுப் போட்டியில் மஞ்சுளவுடன் இணைந்து செயற்பட்டு அணியை வெற்றிபெற வைத்தேன்.

நான் யாழ். பல்கலைக்கழகத்தின் Visiting instructor & coach ஆகவும் செயற்பட்டேன். இக்காலத்தில் யாழ். பாடசாலைகளால் தற்போது விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்களாக இருக்கும் 700 இற்கும் மேற்பட்டோர் எனது மாணவர்களாகவே இருந்தனர்.

கே: இதுவரை நீங்கள் கண்ட ஜோன்ஸ் மற்றும் மத்திய கல்லூரிகளினதும் சிறந்த வீரர்கள் யார்?

சென் ஜோன்ஸைப் பொறுத்தவரையில் சூரியகுமார், தெய்வோந்திரா, சுரேந்திரா, மூத்ததம்பி, சதீஸன், லவேந்திரா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

யாழ். மத்தியைப் பொறுத்தவரையில் ரகுதாஸ், சுரேஸ், அருணோதயன், ஆகாஷ், அம்பலவாணர் டோனால்ட் கணேஷகுமார், பற்குணராஜா ஆகியோர் நான் கண்ட சிறந்த வீரர்கள்.

கே: கிரிக்கெட்டின் நோக்கம் யாது?

கிரிக்கெட் பலவிதமான திறன்களை விதைக்கின்றது. ஆளுமையைத் தருகின்றது, பணிவைத் தருகின்றது, ஒழுக்கமான விளையாட்டு வீரனுக்கும், கல்விமான்களுக்கும் மட்டுமே எங்கும் என்றும் மதிப்பிருக்கும்.

கிரிக்கெட் என்பது மைதான ஒழுக்கத்தை மட்டும் வளர்ப்பது அல்ல. விளையாட்டு வீரன் என்றால் எப்போதும் எங்கேயும் தனது ஒழுக்கத்தால் தன்னை அடையாளப்படுத்த வேண்டும். அதுவே, கிரிக்கெட்டின் நோக்கம். விளையாட்டின் மூலம் நான் உருவாக்க நினைப்பது நல்ல சமுதாயம் ஒன்றையே.

கிரிக்கெட் எப்பெழுதுமே முழுமனதுடன் பழகி விளையாட வேண்டிய ஒரு விளையாட்டு. விளையாட்டுத்துறை மூலம் சகலவற்றையும் பெற்றுக்கெள்ளலாம்.

சிறந்த திட்டமிடலே கிரிக்கெட் வீரர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் : அக்சயன் ஆத்மநாதன்

பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடித்துள்ள நிலையில், மார்ச் மாதம் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில்..

இற்றைக்கு எனக்கு 71 வயதாகிவிட்டது. அதில் 68 வயது வரை கிரிக்கெட் விளையாடினேன். 62 வயது வரை கழகமட்டப் போட்டிகளில் பங்கெடுத்தேன். நான் இறுதியாக விளையாடிய போட்டியில் கூட 25 ஓட்டங்களைப் பெற்றதொடு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தேன்.

கே: வடக்கின் பெரும் சமர் தொடர்பாக தங்களுடைய கருத்து என்ன?

வடக்கின் பெரும் சமரை மூன்று நாட்களுடையதாக நீடித்தவர்களுள் நானும் ஒருவன். காரணம் என்னவென்றால் போட்டியில் தொடர்ச்சியாக சமநிலை என்ற முடிவே கிடைத்துக் கொண்டிருந்தது. அவ்வாறில்லை. போட்டியென்றால் நிச்சயம் முடிவு கிடைக்க வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பிள்ளைகள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டியை 2004ஆம் ஆண்டு முதல் 3 நாட்களுடையதாக நீடித்தோம்.

யாழ். மத்தியும் சென் ஜோன்ஸும் இன்று சிறந்த துடுப்பாட்ட அணிகளைக் கொண்டிருக்க காரணமே இத்துடுப்பாட்டச் சமர் தான். அதேவேளை, இவ்விரு கல்லூரிகளிடையேயான சிறந்த உறவிற்கும் அதுவே காரணம்.

கே: வடக்கின் பெரும் சமரில் தங்களுடைய அனுபவம்

நான் இரண்டு வருடங்கள் விளையாடினேன். 1965ஆம் ஆண்டில் ஏனைய அனைத்து அணிகளையும் வென்று சென். ஜோன்ஸுடன் தோற்றிருந்தோம். 1966ஆம் ஆண்டில் நாங்கள் சிறந்த அணி. அப்போதைய காலத்தில் அத்தனை வீரர்களும் சிறப்பானவர்கள், சிறந்த துடுப்பாட்ட வீரர்கள். காரணம், அவர்களது உடற்தகுதி.

ஆனால், தற்போதைய வீரர்கள் எவரிடமும் சிறந்த உடற்தகுதி  இல்லை. காரணம் பயிற்சியின்மை. கிரிக்கெட்டை சிறந்த பயிற்சியுடன் என்றும் என்னால் முடியும் என்ற எண்ணத்துடன் விளையாட வேண்டும்.

கே: யாழ். மாவட்ட கிரிக்கெட்டின் தற்போதைய நிலை தொடர்பாக தங்களது பார்வை

உண்மையிலேயே யாழ் மாவட்டத்தில் கிரிக்கெட்டை விரும்பிச் செல்வோர் குறைவு. இதற்கு மிகப்பிரதான காரணம் படசாலை சார் மற்றும் சாராத மேலதிக வகுப்புக்கள். கிரிக்கெட்டில் தங்களுக்குக் கிடைக்கும் பெறுதி என்றும் உங்களின் பயிற்சியிலேயே தங்கியுள்ளது.

கே: சில பாடசாலைகள் புதிதாக விளையாடுகின்றன. .  எனினும் உள்ளக வசதிகளிருந்தும் சில பாடசாலைகள் கிரிக்கெட் விளையாடாமலிருக்க காரணம் யாது?

அனேக பாடசாலைகளில் நான் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியிருத்தேன். குறிப்பாக சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன், சாவகச்சேரி இந்துக் கல்லூரி என்பன அதில் முக்கியமானவை.

என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார்

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து…

கிரிக்கெட் மிக நீண்டதொரு பயணத்தைக் கொண்ட விளையாட்டு. அதனை திடீரென ஆரம்பிக்க முடியாது அத்தோடு மிகவும் அதிகமான செலவினத்தைக் கொண்டதாகும். அன்றைய காலம் போன்று மாவட்ட மட்டத்தில் ஐந்து போட்டிகளுடன் பருவகாலம் நிறைவடைவதில்லை. எனவே, இவ்வாறான காணிகள் ஒரு பாடசாலையில் கிரிக்கெட் இல்லாமல் இருக்க காரணமாக அமையலாம்.

கே யாழ்ப்பாணத்தில் இதுவரையில் முதற்தரக் கிரிக்கெட் விருத்தியடையாமைக்குக் காரணம் யாது?

விளையாட்டில் ஆர்வமாகப் பங்கெடுக்கும் வீரர்களுக்கு பாடசாலை முடிந்ததும் தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவ்வாய்ப்பு யாழ். வீரர்களுக்கு இல்லை.  கொழும்பில் சென்று விளையாடுவதாயின் வீட்டு வாடகைக்கும், உணவுச் செலவிற்கும் மட்டுமே அப்பணம் போதுமாக அமைகின்றது. இதனாலே தான் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் மட்டும் கிரிக்கெட் நீடிக்கின்றது.

பயிற்றுவிப்பாளரின் கீழான சிறந்த பயிற்சி வேண்டும். தொழில் வாய்ப்பு பெற்ற வீரர்கள் உருவாகும்போதே முதற்தர கிரிக்கெட்டை விருத்தி செய்யலாம். நேர்த்தியான பயிற்சியும், வீரர்களை வளர்க்கக்கூடிய அனுசரணையாளர்களுமே என்றும் முக்கியம்.

Thepapare.comஇன் சார்பில் தனது பெறுமதி மிக்க நேரத்தை எம்முடன் செலவழித்தமைக்காகவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காகவும் திரு. சண்முகலிங்கம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றோம்.