பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

157

இந்த ஆண்டு (2022) பர்மிங்கம் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டோக்ஸ்

இந்த ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தொடர் மகளிர் T20 போட்டிகளாக நடைபெறவிருக்கின்றது. அதன்படி இந்த T20 போட்டிகளில் தங்கப் பதக்கத்தினை எதிர்பார்த்து 8 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. 

இதில் முதலாவதாக நடைபெறவுள்ள போட்டியில் எதிர்வரும் 29ஆம் திகதி குழு A அணிகளான இந்தியாவும், அவுஸ்திரேலிய அணியும் பங்கெடுக்கின்றன. அதோடு குழு A இல் காணப்படும் ஏனைய அணிகளாக பர்படோஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இருக்கின்றன.

இதேவேளை குழு B இல் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் போட்டியிடுகின்றது.

இரு குழுக்களிலும் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இந்த T20 போட்டிகளின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இந்த T20 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை மகளிர் அணி, இந்திய அணிக்கு எதிரான T20I போட்டிகளில் விளையாடிய அதே அணியாகவே காணப்படுகின்றது.

அதன்படி சமரி அத்தபத்து மூலம் வழிநடாத்தப்படும் இலங்கை குழாத்தில், எதிர்பார்ப்பாக்கப்படும் துடுப்பாட்ட வீராங்கனைகளாக ஹசினி பெரேரா, ஹர்சித சமரவிக்ரம மற்றும் கவிஷ டில்ஹாரி ஆகியோர் காணப்படுகின்றனர். 

இதேநேரம், இளம் வீராங்கனையான விஷ்மி குணரட்ன, சுழல்பந்துவீச்சு சகலதுறை வீராங்கனை விஷ்மி குணரட்ன ஆகியோரும் இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்திற்கு பெறுமதி சேர்க்கவுள்ளனர்.

இலங்கை அணியின் T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பொதுநலவாய விளையாட்டு விழாவின் தமது முதல் போட்டியில் எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தினை எதிர்கொள்ளவுள்ளதோடு, இந்தப் போட்டி எட்ஜ்பாஸ்டன் அரங்கில் நடைபெறவிருக்கின்றது. 

இலங்கை குழாம் 

சமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, உதேசிகா ப்ரோபதினி, சுகந்திகா குமாரி, ரஷ்மி டி சில்வா, ஒசாதி ரணசிங்க, அனுஷ்கா சஞ்சீவனி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<