ICC டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு

157

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசையினை வெளியிட்டிருக்கின்றது.

இந்திய அணியின் பயிற்சியாளரா்கும் ராகுல் டிராவிட்?

புதிதாக வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் அட்டவணையின் அடிப்படையில், இந்திய அணி 121 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிப்பதுடன், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதவுள்ள நியூசிலாந்து அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

இதேநேரம், அவுஸ்திரேலியாவினை நான்காம் இடத்திற்கு பின்தள்ளியிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 109 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது. இதேவேளை, அவுஸ்திரேலிய அணி 108 புள்ளிகளுடன் காணப்படுகின்றது.

ஐந்தாம் இடத்தில் பாகிஸ்தான் 94 புள்ளிகளுடன் காணப்பட, மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு இடங்கள் முன்னேறி 84 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றது. ஏழாம் இடத்தில் தென்னாபிரிக்கா 80 புள்ளிகளுடன் காணப்படுகின்றது.

இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர்

இதேவேளை, புதிய டெஸ்ட் தரவரிசை அட்டவணையில் ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி தற்போது 78 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியினர் புதிய டெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்படுவதற்கு அவர்கள் அண்மைய டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டமே காரணமாக அமைகின்றது.

இதேநேரம் பங்களாதேஷ், ஜிம்பாம்வே ஆகிய அணிகள் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முறையே 9ஆம் மற்றும் 10ஆம் இடங்களில் காணப்படுகின்றன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<