இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி

838

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றிருக்கும் இலங்கை இளையோர் அணி தமது முதலாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய இளையோர் அணியிடம் 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

எனினும் பின்வரிசையில் வந்த ஹசித்த போயகொட மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு பந்துவீச்சாளர்களும் போதிய பயிற்சியை பெற்றனர்.  

அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற..

ஜனவரி 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 16 அணிகளும் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பயிற்சிப் போட்டிகளில் ஆடி வருகிறன. இதில் இலங்கை அணி இன்று (09) தனது முதல் பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய இளையோர் அணியை எதிர்கொண்டது.

கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை 10 ஓட்டங்களிலேயே இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நிபுன் மாலிங்கவால் வீழ்த்த முடிந்தது. ஆரம்ப வீரர் மெக்ஸ் பிரையன் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்து வந்த அணித் தலைவர் ஜேசன் சங்ஹாவை சுழல் வீரர் பிரவீன் ஜயவிக்ரம 27 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். எனினும் ஆஸி. இளையோர் அணிக்காக ஆரம்ப வீரர் ஜக் எட்வர்ட்ஸ் (50) மற்றும் ​ஜொனதன் மெர்லோ (78) ஆகியோர் சிறப்பாக ஆடி அரைச்சதங்கள் பெற்றமை அந்த அணி சவாலான ஒட்டங்களை பெற உதவியது.  

அவுஸ்திரேலிய அணி தனது 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை பெற்றது.

பயிற்சிப் போட்டி என்பதால் இலங்கை  இளையோர் அணி எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. எனினும் திரித்துவக் கல்லூரியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் திசரு ரஷ்மிக்க 10 ஓவர்களையும் வீசி 59 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிபுன் மாலிங்க மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அணித் தலைவர் கமின்து மெண்டிஸ் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின்..

இந்நிலையில் 251 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்டது. அந்த அணி 64 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப வீரர்களான தனஞ்சய லக்ஷான் மற்றும் நிஷான் மதுஷங்க தலா 12 ஓட்டங்களுடன் விக்கெட்டை தாரைவார்த்தனர். அடுத்து வந்த நான்கு வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.

எனினும் 7ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசித்த போயகொட மற்றும் அஷேன் பண்டார இருவரும் சிறப்பாக ஆடி நம்பிக்கை தந்தனர். இருவரும் இணைந்து 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் ஓட்டங்கள் 150ஐ தாண்டியது.   

சிறப்பாக ஆடி வந்த கண்டி, திரித்துவ கல்லூரியின் போயகொட 69 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அட்டமிழந்தார். அவர் இந்த ஓட்டங்களை பெற 78 பந்துகளுக்கு முகம்கொடுத்து 10 பௌண்டரிகளை பெற்றார். மறுபுறம் சிறப்பாக ஆடிவந்த காலி, புனித ஆலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த அஷேன் பண்டார 72 பந்துகளில் 4 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தபோதும் இலங்கை அணியின் கடைசி எதிர்பார்ப்பு சிதறியது.   

கடைசி வரிசை வீரர் ஜெஹான் டானியல் அதிரடியான ஆடிய ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களை பெற்ற போதும் மறுமுனையின் எஞ்சிய இரு விக்கெட்டுகளும் அடுத்தடுத்த பந்துகளுக்கு வீழ்த்தப்பட்டன.

இறுதியில் இலங்கை அணி 42.5 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகோடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் ஜேசன் ரல்ஸ்டன் மற்றும் வில் சதர்லாண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவின் மகனான ஒஸ்டின் வோ ஆஸி. 19 வயதுக்கு உட்பட்ட அணியில் ஆடுகிறார். அவர் 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை விழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை இளையோர் அணி தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சிப் போட்டியில் வரும் வியாழக்கிழமை (11) இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட அணியை எதிர்கொள்ளவுள்ளது.   

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய இளையோர் அணி – 251/7 (50) – ஜொனதன் மெர்லோ 78, ஜக் எட்வர்ட்ஸ் 50, நெதன் மக்ஸ்வீனி 31, ஜேசன் சங்ஹா 27, பரன் உப்பால் 22, பிரவீன் ஜயவிக்ரம 2/18, நிபுன் மாலிங்க 2/41, திசரு ருஷ்மிக்க 59/2, கமின்து மெண்டிஸ் 1/21   

இலங்கை இளையோர் அணி – 198 (42.5) –  ஹசித்த போயகொட 69, அஷேன் பண்டார 51, ஜெஹான் டானியல் 20*, வில் சதர்லாண்ட் 3/25, ஜேசன் ரல்ஸ்டன் 3/36, ஒஸ்டிக் வோ 2/27   

போட்டி முடிவு – அவுஸ்திரேலிய அணி 53 ஓட்டங்களால் வெற்றி