மே.தீவுகள் டெஸ்ட் குழாத்தில் இணைந்த ஷெனொன் கேப்ரியல்

167
Espncricinfo

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில், மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷெனொன் கேப்ரியல் இணைக்கப்பட்டுள்ளார்.  

ஷெனொன் கேப்ரியல் கணுக்கால் உபாதையால் அவதிப்பட்டுவந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான மேலதிக வீரர்கள் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். அத்துடன், அவர் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் குழாத்துக்கு உள்வாங்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட்டுடன் பங்குதாரர்களாகும் மை கோலா

இவ்வாறான நிலையில், ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் குழாத்துக்குள்ளான பயிற்சிப் போட்டியில் அபாரமாக விளையாடியதுடன், ஷெனொன் கேப்ரியல் அவரது உடற்தகுதியையும் நிரூபித்திருந்தார். இதன் காரணமாக, அவர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். 

(Courtesy – cricket365)

கேப்ரியல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை என்பதுடன், அதன்பின்னர் கௌண்டி கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார். க்ளோசெஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடியிருந்த இவர், குறித்த தொடரிலும் சரியாக பிரகாசிக்கவில்லை. இதனால், குழாத்தில் அவரது இடம் கேள்விக்குறியாகியிருந்தது. 

ஷெனொன் கேப்ரியல் தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தேர்வாளர் ரொஜர் ஹார்பர் குறிப்பிடுகையில், “எமது குழாத்தில் ஷெனொன் கேப்ரியலை இணைத்துக்கொள்ள கிடைத்தமையை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். அவர் உடற்தகுதியுடன் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளார். அத்துடன், கேப்ரியல் அணிக்கு அவரது அனுபவத்தையும், பலத்தையும் பந்துவீச்சில் சேர்ப்பார்” என்றார். 

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

அதேநேரம், ஷெனொன் கேப்ரியல் குழாத்துக்குள் நடைபெற்ற பயிற்சியில் அபாரமாக பந்துவீசி, 122 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன், அவரது உடற்தகுதியை நிரூபிக்க 3 இன்னிங்ஸ்களிலும் பந்தவீசியிருந்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய தினம் (3) மென்செஸ்டரிலிருந்து, சௌதெம்டன் செல்லவுள்ளது. அதேநேரம், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ் போவ்லில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<