இந்திய அணியில் இருந்து விலகி நாடு திரும்பிய பும்ரா!

Asia Cup 2023

199

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆசியக் கிண்ணத் தொடரில் நேபாளம் அணிக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜஸ்ப்ரிட் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக குழாத்திலிருந்து விலகி மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளார். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்பியதற்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் சபை வெளிப்படுத்தவில்லை. 

லோக்கி பெர்குஸன் தலைமையில் பங்களாதேஷை எதிர்கொள்ளும் நியூசிலாந்து

நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ள ஜஸ்ப்ரிட் பும்ரா மீண்டும் ஆசியக் கிண்ணத்தில் இணையும் திகதி தொடர்பில் அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும் சுபர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றால் குறித்த போட்டிகளில் பும்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஜஸ்ப்ரிட் பும்ரா கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியிருந்தார். 

ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் நேபாளம் அணியை கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<