சங்காவிற்கு அரைச்சதம்

1765
Sanga

இங்கிலாந்தில் உள்ளூரில் நடைபெறும் நெட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் கிண்ணத்தில் இலங்கை அணியின் நட்சத்திர இடது கைத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சரே அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரின் நேற்று நடைபெற்ற தெற்கு குழுவிற்கான போட்டியில் சரே அணியை சசெக்ஸ் அணி எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரே அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

சரே அணி 205/4 (20)
ஜேசன் ரோய் 109
குமார் சங்கக்கார 54
டுவயின் ப்ராவோ 30
க்றிஸ் ஜோர்டன் 35/2

இலங்கை அணியின் குமார் சங்கக்கார 42 நிமிடங்கள் மைதானத்தில் நிலைத்தாடி 31 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்று இருந்தார்.

சசெக்ஸ் அணி 182/5 (20)
ரொஸ் டெய்லர் 51
லூக் ரயிட் 24
க்றிஸ் ஜோர்டன் 30*
சம் கரன் 30/2
சபர் அன்சாரி 35/2

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சதம் அடித்த சரே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்டார்.

மஹேலவின் அசத்தல் வீணானது

இதேவேளை நேற்று நடைபெற்ற இன்னுமொரு போட்டியில் மஹேல ஜயவர்தன விளையாடும் சமர்செட் அணி 7 விக்கட்டுகளால் எசெக்ஸ் அணியை தோற்கடித்து இருந்தது.  இந்த போட்டியில் மஹேல  6 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டம் இழந்து இருந்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்