ICC யினால் சனத் ஜனசூரியவுக்கு இரண்டு ஆண்டு தடை

1814

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு விதி இரண்டினை மீறியதை ஒப்புக்கொண்ட சனத் ஜனசூரியவுக்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ICC யின் குறித்த சட்டத்தின் பின்வரும் விதிகளை மீறியதை இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான ஜயசூரிய ஒப்புக்கொண்டார்:  

01. விதிமுறைகள் சரம் 2.4.6 இன் படி, ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழையாது போனமை. விசாரணைகளின் ஒரு அங்கமாக ஊழல் தடுப்பு பிரிவு கேட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியமை.

ஐ.சி.சி. இன் விதிமுறைகளை மீறியதாக சனத் ஜயசூரிய மீது குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் …

02. விதிமுறைகள் சரம் 2.4.7 இன்  படி, ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளை தாமதிக்க காரணமாக அமைந்தமை. இதற்குள் ஊழல்களை இனங்காணும் விசாரணைகளுக்கு தேவையாக இருந்த ஆவணங்களை சேதப்படுத்தியது, அதனை மறைத்து வைத்தது, மாற்றியது, அழித்தது போன்றவையும் அடங்கும்.

இதனை ஒப்புக்கொண்டதன் காரணமாக, இரண்டு ஆண்டு கால தகுதியின்மையை அவர் ஏற்றுக்கொண்டார்.

ஐ.சி.சி. பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறியதாவது, “விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிடும் விதிகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு விதிகளின் கீழ் ஒத்துழைப்புக்கான பங்கேற்பின் அவசியம் ஒரு முக்கிய ஆயுதமாகும். எமது விளையாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு இந்த விதிகள் அவசியமாகும்.

நான் எப்போதும் நேர்மையாகவே நடப்பவன் – சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின்….

இலங்கை கிரிக்கெட்டில் ஐ.சி.சியின் மிகப் பரந்த ACU ஊழல் விசாரணையின் புதிய அங்கமாகவே ஜயசூரியவின் தண்டனை உள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ACU வழங்கிய பொது மன்னிப்புக் காலத்தில் பதினொரு வீரர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் புதிய தகவல்களுடன் முன்வந்திருந்தனர்” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறும்போது, “இந்த பொது மன்னிப்பு சிறந்த முறையில் செயற்பட்டது. குறிப்பிடத்தக்க புதிய மற்றும் முக்கியமான இரகசிய தகவல்கள் கிடைத்தன. இந்த புதிய தகவல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் எமது விசாரணைகளுக்கு உதவியாக இருந்ததோடு சில புதிய விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

அந்த பொதுமன்னிப்பில் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறிக்கொள்வதோடு பகிரப்பட்ட தகவல்கள் மூலம் இலங்கையின் நிலைமை குறித்து தற்போது தெளிவான விளக்கம் ஒன்று கிடைத்திருப்பதோடு எமது விசாரணைகள் தொடர்கின்றன” என்றார்.

சனத் ஜயசூரிய இலங்கை அணியின் சிரேஷ்ட தேர்வாளராக 2016ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி வரை செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<