LPL பணிப்பாளர் ராஜினாமா; புதிய பணிப்பாளர் நியமனம்

136
Samantha Dodanwela

இலங்கையில் கடந்த இரண்டு பருவகாலங்களாக நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கின் (LPL), தொடர் பணிப்பாளராக செயற்பட்டுவந்த ரவீன் விக்ரமரத்ன தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த இரண்டு பருவகாலங்களாக போட்டித்தொடரை வெற்றிகரமாக நடத்திமுடித்த ரவீன் விக்ரமரத்ன, தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

>> பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தன்னுடைய இராஜினாமா தொடர்பில் குறிப்பிடுகையில், “இந்த பதவியை புதிய நபர் ஒருவருக்கு அளிப்பதற்கான சரியான தருணம் இது. நாம் வெற்றிகரமாக தொடரை நடத்தியமை போன்று, மேலும் சிறப்பாக தொடர் அமையவேண்டும்” என்றார்.

ரவீன் விக்ரமரத்ன தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், 2022ம் ஆண்டு LPL தொடருக்கான புதிய பணிப்பாளராக சமந்த தொடான்வெல நியமிக்கப்பட்டுள்ளார்.

சமந்த தொடான்வெல இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார் என்பதுடன், இலங்கை கிரிக்கெட்டின் போட்டித்தொடர் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.

இலங்கையில் 1991ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டுவரை எஸ்.எஸ்.சி கழகத்துக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள சமந்த தொடான்வெல, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவரிலும் இடம்பெற்றிருந்தார்.

சமந்த தொடான்வெல தற்போது வணிக தயாரிப்பு தரகர்களின் நிர்வாக இயக்குனராக செயற்பட்டு வருவதுடன், கொழும்பு தேயிலை தரகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<