SAT20 தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நுவான் துஷார!

SAT20 League 2024

189

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷார தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SAT20 தொடரில் எம்.ஐ. கேப் டவுன் (MI Cape Town) அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

எம்.ஐ. கேப் டவுன் அணியில் ஏற்கனவே விளையாடியிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக நுவான் துஷார SAT20 தொடரில் எம்.ஐ. கேப் டவுன் அணியில் விளையாடவுள்ளார். 

>> இலங்கை 19 வயதின் கீழ் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்

நுவான் துஷாரவை கடந்த மாதம் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் வீரர்கள் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்தது. இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழ் SAT20 தொடரில் விளையாடும் எம்.ஐ. கேப் டவுன் அணிக்காகவும் இவர் இணைக்கப்பட்டுள்ளார். SAT20 தொடர் இம்மாதம் 10ம் திகதி முதல் பெப்ரவரி 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

இதேநேரம் இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான லசித் குரூஸ்புள்ளே பங்களாதேஷில் நடைபெறவுள்ள BPL தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் டர்டெண்டோ டாக்கா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இவர் இலங்கை தேசிய அணிக்காக விளையாடாத போதும் இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற அபு தாபி T10 தொடரில் விளையாடியதோடு, தற்போது BPL தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<