சார்க் சைக்கிளோட்டத்தில் இலங்கை ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

87
South Asian Games
 

நேபாளத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் சைக்கிளோட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி வீரர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்திருந்த ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலமாக தெரியவந்துள்ளது.

இதன்படி, தெற்காசிய விளையாட்டு விழாவில் வைத்து இந்திய சைக்கிளோட்ட சங்கத்தினால் இலங்கை சைக்கிளோட்ட சங்கத்தின் அதிகாரி ஒருவருக்கு மிகவும் விலை உயர்ந்த வொட் வகையைச் சேர்ந்த இரண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டநிர்ணய விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு

2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக

முன்னதாக தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் பங்கேற்பு குறித்தும், பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகள் குறித்தும் மீளாய்வு அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் க்றகரி டி சில்வா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இதில் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான அணித் தேர்வுகளில் இடம்பெற்ற குளறுபடிகள், நிர்வாக முறைகேடுகள் உள்ளிட்ட 11 விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்படி, அந்தக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ் ருவன் சந்த்ரவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இவ்வாறு தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட அணி மற்றும் இலங்கை சைக்கிளோட்ட அணி என்பன ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, தெற்காசிய விளையாட்டு விழாவின் போது இரண்டு சைக்கிள்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது உண்மைதான் என்றும், போட்டிக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் தலைவர் என். கருணாரத்ன விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சைக்கிள்கள் மிகவும் பாரமாக இருப்பதன் காரணமாக தெற்காசிய விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு முன் அதை நேபாளத்துக்கு கொண்டு வந்து தரும்படி இந்திய சைக்கிளோட்ட சங்கத்துக்கு தெரியப்படுத்தியதாகக் கூறியுள்ள அவர், குறித்த இரண்டு சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டமை குறித்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் தலைவர் விசாரணைக் குழவிடம் தெரிவித்துள்ளார். 

இதேநேரம், மலைப்பகுதியில் நடைபெறுகின்ற மௌண்டன் சைக்கிளோட்ட மவுன்ட் ஹில் போட்டிக்கு தலைக்கவசம் இல்லாமல் போட்டியில் களமிறங்கியதும், திடீரென ஒரு வீரரை குறித்த போட்டிக்கு உட்டுபடுத்திவிட்டு பிறகு போட்டி நடைபெறும் இடத்துக்குச் சென்று அதில் பங்கேற்காமல் விலகியதும் ஏன் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

SAG பதக்கத்துடன் சாதாரண தர பரீட்சையிலும் சித்தியடைந்த மாணவிகள் கௌரவிப்பு

நேபாளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது

எனவே, சைக்கிளோட்டத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக குறித்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, தெற்காசிய விளையாட்டு விழா நீச்சல் போட்டிகளில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்ட செரந்த டி சில்வா மற்றும் கிமிகோ ரஹீம் ஆகிய வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் வைத்தியப் பிரிவினால் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்கு சமூகமளிக்காமல், மருத்துவ காரணங்களைக் காட்டி போட்டித் தொடரிலிருந்து விலகியமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பளுதூக்கல் வீரர் ஒருவர் தன்னிச்சையாக போட்டியில் கலந்துகொள்ள மறுத்தமை, கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கோ கோ உள்ளிட்ட 11 விளையாட்டுகளில் இடம்பெற்ற குளறுபடிகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு வெவ்வேறாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SAG பதக்கம் வென்ற மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊக்கமருந்து குற்றச்சாட்டு

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும்

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய, குறித்த ஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கையை விசாரிக்க விசேட பொலிஸ் பிரிவுக்கு கையளிக்கப்பட்டதுடன், மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், விளையாட்டின் மோசடிகளைத் தவிர்க்கும் சட்டத்தின் ஊடாக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு தண்டணை வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. 

கோமதியின் தங்கம் பறிமுதல்: இலங்கை வீராங்கனைக்கு பதக்கம்

கட்டாரின் தோஹாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய

நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை அணி 40 தங்கப் பதக்கங்கள், 83 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 128 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க