தேசிய மட்டத்தில் அதிவேக வீரராக மகுடம் சூடிய மொஹமட் சபான்

1438

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதிவேக கனிஷ்ட வீரர்களைத் தெரிவு செய்கின்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததுடன், இதன் இறுதிப் போட்டிகள் 4 வயதுப் பிரிவுகளின் கீழ் இன்று(26) நடைபெற்றன.  

கனிஷ்ட மெய்வல்லுனரில் தொடர்ந்து முறியடிக்கப்படும் போட்டி சாதனைகள்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ….

இதில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நிகவெரட்டியவைச் சேர்ந்த மொஹமட் சபான், 100 மீற்றர் இறுதிப் போட்டியை 10.83 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தனது தொடர்ச்சியான 2ஆவது வெற்றியையும் பதிவுசெய்தார்.

முன்னதாக நேற்று(25) மாலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 10.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சபான், தகுதிச் சுற்றில் 10.98 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றுமுன்தினம்(24) நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்துகொண்ட சபான், போட்டியை 21.50 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலத்தின் பழைய மாணவரான மொஹமட் சபான், 2013ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி ஒவ்வொரு வருடமும் தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பதிவு செய்தும் வந்தார்.

AISG 2017 U 20 200M winner Mohamed safan intreview

Uploaded by ThePapare.com on 2017-10-17.

எனினும், 2015ஆம் ஆண்டில் எந்தவொரு வெற்றியையும் சபானுக்கு பெற்றுக்கொள்ள முடியில்லை. அதனைத்தொடர்ந்து 2016இல் 200 மீற்றரில் முதலிடத்தையும், 100 மீற்றரில் 2ஆவது இடத்தையும் பெற்று அசத்தினார்.

இந்நிலையில், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும், 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.61 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும் அவர் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை வெற்றியின் பின்னர் எமது இணையத்தளத்துக்கு சபான் வழங்கிய விசேட செவ்வியில், ”கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, எனது பாடசாலையான அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலம், பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் சிறுவயது முதல் இன்றுவரை மெய்வல்லுனர் துறையில் ஆர்வத்துடன் விளையாடி வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற எனது பெற்றோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் …….

இதேநேரம், 23 வயதுக்குட்பட்ட மெய்வல்லுனர் குழாத்திற்கு தற்போது தெரிவாகியுள்ள சபான், எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்வதற்கும், சர்வதேச மட்டப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்பதற்கு விரும்புவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

வட மேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், நிகரவெரட்டிய தேர்தல் தொகுதியில் உள்ள அம்புக்காகம என்ற சிறிய கிராமத்தில் இருந்து வந்து இவ்வாறு தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்து வருகின்ற சபானின் திறமைகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், நிச்சயம் இலங்கையின் மெய்வல்லுனர் துறை அரங்கில் இது போன்ற மேலும் பல வீரர்களை உறுவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை, சபான் பங்குபற்றிய 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாத்தறை மெய்வல்லுனர் சங்கத்தைச் சேர்ந்த லஹிரு பத்ம நெதிக் குமார, போட்டித் தூரத்தை 10.88 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த . காவிந்த, போட்டித் தூரத்தை 11.04 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

தமிழ் வீடியோக்கள் – Tamil Videos

Get match updates, breaking news, features and many more delivered to your fingertips as it happens- ThePapare SMS updates.

காணொளிகளைப் பார்வையிட