தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது வெற்றி

171

பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்றுவரும் தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் (SABA) தமது இரண்டாவது போட்டியில் விளையாடியுள்ள இலங்கை கூடைப்பந்து அணி நேபாள அணியை 70-57 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருக்கின்றது.

தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் கூடைப்பந்து அணியை 65-34 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை கூடைப்பந்து அணிக்கு நேபாளத்துடனான வெற்றி, இத்தொடரில் கிடைத்த தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியாக இருக்கின்றது.

தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர், 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியக் கிண்ண கூடைப்பந்தாட்ட தொடரின் தகுதிகாண் போட்டிகளின்  அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது இறுதிப் போட்டியில் நேபாள அணியினர் பூட்டானை 68-65 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்திருந்த காரணத்தினால் அதே உற்சாகத்துடன் இலங்கை அணியுடனான போட்டியை ஆரம்பம் செய்திருந்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் கால்பகுதி 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாள கூடைப்பந்து அணிக்கு சொந்தமாகியிருந்தது.

ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடருக்காக இலங்கை அணி ஈரான் பயணம்

இதனையடுத்து, தாம் பின்னடைவில் இருப்பதை உணர்ந்த இலங்கை அணி புள்ளிகள் சேர்க்கக்கூடிய வீரர்களை சுழற்சி செய்வதில் வெற்றி கண்டது. இதனால் முதல் அரைப்பாதி நிறைவில் போட்டியின் ஆதிக்கத்தை 33-29 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை தமக்காக எடுத்துக் கொண்டது.

தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி இரண்டு கால்பகுதிகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்டிய இலங்கை அணி தமது தடுப்பையும் பலப்படுத்தி புள்ளிகள் பெறும் வேகத்தையும் அதிகரித்தது. நேபாள அணியும் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களில் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட போதிலும், இலங்கை அணி வீரர்கள் நேபாளத்தை விட சிறப்பாக செயற்பட்டனர்.

இதன்படி ஆட்டத்தின் இறுதி இரண்டு கால்பகுதிகளிலும் 37 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி நேபாளத்துடனான போட்டியை 70-57 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்டது.

நேபாளத்துக்கு எதிராக அதிக புள்ளிகள் பெற்றுத்தந்து இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற முக்கிய பங்களிப்பை வழங்கிய வீரராக திமோத்தி நிதுஷன் இருந்தார். திமோத்தியின் சார்பில் இலங்கை அணிக்கு இப்போட்டியில் மொத்தமாக 16 புள்ளிகள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கூடைப்பந்து அணி, தெற்காசிய கூடைப்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் அடுத்த போட்டியில் வெள்ளிக்கிழமை (29) மாலைதீவு அணியை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<