இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘B’ மட்ட அணிகளுக்கான மூன்று நாட்களைக் கொண்ட மூன்று போட்டிகள்  இன்று நடைபெற்றன.

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று 92 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த கடற்படை அணி சிறப்பாகத் துடுப்பாடி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்று போட்டியினை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது.

இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய மதுர மதுஷங்க 120 ஓட்டங்களையும், சமீர சந்தமால் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அனுராத ராஜபக்ச 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சமிந்த பதிரன 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆட்ட நேர முடிவில், குறித்த இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக் கொண்டதால் போட்டி வெற்றி தொல்வியின்றி முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 294(71) – புத்திக்க ஹசரங்க 72, குசல் எதுரிசூரிய 61, சமீர சந்தமல் 48, அஷான் ரணசிங்க 46*, அனுராதா ராஜபக்ச 42/3, சிரத் மப்படுன 63/3

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்க்ஸ்) : 389(112.2) – தனுஷ்க தர்மசிறி 134, ஹஷான் பிரபாத் 109*, மதுர மதுசங்க 45/4, டிலங்க அவர்ட் 87/3

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 337/5 (82) – மதுர மதுஷங்க 120, சமீர சந்தமல் 105*, புத்திக்க ஹசரங்க 52, அனுராதா ராஜபக்ச 21/2, சமிந்த பத்திரன 47/2


இலங்கை விமானப்படை எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை விளையாட்டுக் கழகம்

115 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் களமிறங்கிய விமானப் படை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

ரங்கன திசாநாயக்க கூடிய ஓட்டங்களாக 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போதும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர். சனக்க கொமசறு 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 172(45.1) – உதயவன்ச பாராக்ரம 76, யோஹான் டி சில்வா 20/3, சமிந்த பண்டார 37/2, சமிக்காற எதிரிசிங்க 37/2, அககலங்க கனேகம 39/2

இலங்கை துறைமுக அதிகார சபை (முதல் இன்னிங்ஸ்) : 347(106.4) – கயான் மனிஷன் 72, ரனேஷ் பெரேரா 68, இஷான் ரங்கன 43, ஹஷான் ஜேம்ஸ் 31/4, நிமேஷன் மென்டிஸ் 69/3

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 172 (56.1) – ரங்க திசாநாயக்க 41, உபவன்ச பராக்ரம 33, லஹிறு லக்மால் 27, சானக கோமசாரு 47/5, சமிகர எதிரிசிங்க 59/3, சமிந்த பண்டார 29/2


களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பௌதிக கலாச்சார கழகம்

மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று தமது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் 222 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் சார்பாக துடுப்பாட்டத்தில் சமோத் சில்வா 93 ஓட்டங்களையும் ரிசித் உபமால் 61 ஓட்டங்களையும் பெற்றனர். களுத்துறை பௌதிக கலாச்சார கழகம் சார்பாக ரசிக பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

313 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய களுத்துறை பௌதிக கலாச்சார கழகம் 135 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 327(95.2) – தரிந்து சிரிவர்தன 107, சுலான் ஜயவர்தன 59, விஷ்வசந்த வீரகோன் 94/5

களுத்துறை பௌதிக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 237(80.3) – பதும் நிஸ்ஸங்க 88, மனோஜ் தேஷப்ரிய 60, மங்கல குமார 73/4

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 222/3(55) – சமோத் சில்வா 93, ரிசித் உப்மால் 61, ரசிக பெர்னாண்டோ 77/2

களுத்துறை பௌதிக கலாச்சார கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135/4(48) – தமிது அஷான் 64*, யொஹான் ரஷ்மிக 31/1