ரஷ்யாவை வென்றது சுலோவக்கியா

210
Russia 1-2 Slovakia - Euro 2016
Russia 1-2 Slovakia - Euro 2016

15ஆவது ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டி (யூரோ கிண்ணம்) பிரான்ஸ் நாட்டில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2ஆவது சுற்றுக்குத் தகுதிபெறும்.

அந்த அடிப்டையில்பி” பிரிவில் நேற்று நடந்த  போட்டியில் ரஷியாவும், சுலோவக்கியாவும் கோதாவில் குதித்தன. முதல் வினாடியில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. 32ஆவது நிமிடத்தில் சுலோவக்கியா வீரர் விளாடிமிர் வெஸ்சும், 45ஆவது நிமிடத்தில் மாரெக் ஹாம்சிக்கும் கோல் போட்டு ரஷியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

பதிலடி கொடுக்கப் போராடிய ரஷியாவுக்கு 80ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் டெனிஷ் குலுஷகோவ் ஆறுதல் தந்தார். சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை அவர் தலையால் முட்டி கோலுக்குள் அனுப்பினார். இறுதிக் கட்டத்தில் கோலை சமநிலை செய்ய ரஷிய வீரர்கள் மேலும் தீவிரம் காட்டிய போதிலும் கிடைத்த சில வாய்ப்புகள் வீணானதால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

பதவி நீக்கம் செய்யப்பட்டார் பிரேசில் பயிற்சியாளர்

முடிவில் சுலோவக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியது. தனிநாடாகப் பிரிந்த பிறகு ஐரோப்பிய கால்பந்து போட்டியில் சுலோவக்கியா ருசித்த முதல் வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் வேல்ஸ் அணியிடம் தோற்று இருந்தது. அதே சமயம் தனது முதல் லீக்கில் இங்கிலாந்துடன்சமநிலையில் முடித்த ரஷியாவுக்கு இது முதலாவது அடியாகும்.

இன்றைய போட்டிகளில்  இங்கிலாந்துவேல்ஸ் (மாலை 6.30 மணி), உக்ரைன்வடக்கு அயர்லாந்து (இரவு 9.30 மணி), ஜெர்மனிபோலந்து (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்