மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு 30 ஆண்டுகளில் மோசமான ஆரம்பம்

60

ஓல்ட் டிரபர்டில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைடட் மற்றும் ஆர்சனல் அணிகளுக்கு இடையிலான ப்ரீமியர் லீக் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. 

இலங்கை நேரப்படி இன்று (01) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டி முடிவுகளின்படி யுனைடட் அணி இதுவரை ஏழு போட்டிகளில் ஒன்பது புள்ளிகளைப் பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. 1989/90 பருவத்திற்கு பின்னர் அந்த அணி பெற்ற மோசமான ஆரம்பமாக இது உள்ளது. 

மெஸ்ஸியின் காயத்திற்கு இடையே பார்சிலோனா வெற்றி

ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A …….

இந்தப் போட்டி முடிவுக்கு அமைய ஆர்சனல் அணி 12 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெற போராடிய நிலையில் ஸ்கொட் மெக்டொமியான் பெற்ற கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடட் முன்னிலை பெற்றது. 

எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்தபோது பந்தை தன்வசம் பெற்ற ஆர்சனல் அணி 58 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அபுமயங் பெற்ற அந்த கோல் ஆரம்பத்தில் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டபோதும் வீடியோ உதவி நடுவர் மூலமே உறுதி செய்யப்பட்டது.     

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<