IPL தொடருக்கு நிகராக ஆரம்பிக்கப்படவுள்ள புதிய T20 லீக்

Emirates Cricket Board

475

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை போன்று, ஆறு அணிகளடங்கிய T20  கிரிக்கெட் லீக் ஒன்றினை நடத்துவதற்கு ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபை ஆரம்பிக்கும் இந்த கிரிக்கெட் தொடரானது, எதிர்வரும் டிசம்பர்-ஜனவரி (2021-22) மாத காலப்பகுதியில் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு உயிர்கொடுப்பதே எமது பணி – முரளிதரன்

இந்த கிரிக்கெட் தொடரினை நடத்துவதற்கு பல கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய அரபு கிரிக்கெட் சபையின் பொது செயலாளர் முபாஷிர் உஸ்மானி தெரிவித்துள்ளார். 

“பலர் இந்த தொடரை நடத்துவதற்கு தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில், ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள், இந்திய வர்த்தகர்கள் மற்றும் பொலிவூட் நட்சத்திரங்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக உள்ளார்கள்” 

ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபை ஆரம்பிக்கவுள்ள இந்த தொடரில் ஆறு அணிகளை இணைப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், ஒருமாத இடைவேளைக்குள் இறுதிக்கட்ட தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் எமது திட்டம். அணியின் உரிமையாளர்கள் மற்றும் தொடரின் கட்டமைப்பு தொடர்பில் ஒரு மாதத்துக்குள் தீர்மானிப்போம். 

வீரர்களுக்கான ஊதியம் கட்டாயமாக அதிகமாக வழங்கப்படும். ஆலோசனைகளின் பின்னர் இந்த விடயம் தொடர்பில் உறுதிசெய்யப்படும். அத்துடன், உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் அளவுக்கு இந்த தொடரை நடத்தவதற்கு திட்டமிட்டுள்ளோம்“ என இவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபை, ஐ.பி.எல். அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கெபிட்டல்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் இன்னுமொரு அணியென நான்கு ஐ.பி.எல். அணிகளை கொண்டு தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. குறிப்பாக மும்பை அணியுடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதும், தொடர் நடத்தப்படவில்லை. எனினும், இம்முறை ஆறு அணிகள் கொண்ட இந்த தொடரை நடத்துவதில் ஐக்கிய அரபு இராட்சிய கிரிக்கெட் சபை தீவிரம் காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் இங்கு நடைபெற்றதுடன், நீண்டகாலமாக பாகிஸ்தான் அணி அவர்களுடைய சர்வதேச போட்டிகளை இங்கு விளையாடினர். தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அவர்களுடைய சர்வதேச போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<