நீல நிறங்களின் சமரில் புனித தோமியர் கல்லூரி வெற்றி

238

கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையில் கொழும்பு SCC மைதானத்தில் நடைபெற்ற 140 ஆவது நீல நிறங்களின் சமரில் புனித தோமியர் கல்லூரி அணி 12 வருடங்களுக்குப் பிறகு சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

இப்போட்டித் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த புனித தோமியர் கல்லூரி அணி, போட்டியின் அனைத்து கௌரவத்தையும் பெற்று டி.எஸ் சேனநாயக்க ஞாபகார்த்த கேடயத்தை மீண்டும் தம்வசப்படுத்தியது. இறுதியாக 2007 ஆம் ஆண்டு அஷான் பீரிஸ் தலைமையிலான தோமியர் கல்லூரி அணி நீல நிறங்களின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கலன – உமயங்க ஆகியோரின் அபார ஆட்டத்தால் தோமியர் கல்லூரி முன்னிலையில்

உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடரில் 2 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள நீல நிறங்களின் சமர் என்று அழைக்கப்படும் புனித தோமியர் மற்றும் றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் சமர் கடந்த வியாழக்கிழமை (07) SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய றோயல் கல்லூரி, முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் தோமியர் கல்லூரியின் கலன பெரேரா 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி அணி, கலன பெரேரா மற்றும் உமயங்க சுவாரிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

அதன் பிறகு தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பாடிய றோயல் கல்லூரி அணி, நேற்றைய இரண்டாவது நாள் ஆட்ட நிறைவின் போது 4 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, போட்டியின் மூன்றாவது நாளான இன்று (09) காலை தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த றோயல் கல்லூரி அணி, முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 259 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பில் பசிந்து சூரியபண்டார 67 ஓட்டங்களை பெற்றதோடு, கமில் மிஷார 34 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் கலன பெரேரா 3 விக்கெட்டுக்களைப் பதம்பார்க்க, யொஹான் பெரேரா மற்றும் டிலோன் பீரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் புகைப்படங்களைப் பார்வையிட…

Photos: Royal College vs S. Thomas’ College – 140th Battle of the Blues | Day 3

இதனையடுத்து 121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய தோமியர் கல்லூரி அணிக்கு சிதார ஹப்புஹின்ன மற்றும் ஷவின் டி மெல் அரைச்சத இணைப்பாட்டமொன்றைப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் கமில் மிஷாரவின் பந்துவீச்சில் அணித் தலைவர் சித்தார ஹப்புஹின்ன 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவருடைய ஆட்டமிழப்பைத் தொடர்ந்து மிகவும் நிதானமாக துடுப்பாடிய ஷலின் டி மெல், எதிரணி பந்துவீச்சுக்களை சிறப்பாக முகங்கொடுத்து அரைச்சதம் கடந்ததுடன், தோமியர் கல்லூரியின் வெற்றயை உறுதி செய்தார்.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஷலின் டி மெல் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 67 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கமில் மிஷார, கிஹான் பண்டிதரத்ன மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன்படி, போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணி, 140 ஆவது நீல நிறங்களின் சமரில் சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

இம்முறை போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை புனித தோமியர் கல்லூரியின் கலன பெரேராவும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே கல்லூரியின் உமயங்க சுவாரிசும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதை புனித தோமியர் கல்லூரியின் ஷலின் டி மெல் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

Royal College

158/10 & 148/4

(51 overs)

Result

S. Thomas' College

296/10 & 0/0

(0 overs)

Royal College’s 1st Innings

Batting R B
Extras
Total
158/10 (48.3 overs)
Fall of Wickets:
Bowling O M R W E

S. Thomas' College’s 1st Innings

Batting R B
Extras
Total
296/10 (78.5 overs)
Fall of Wickets:
Bowling O M R W E







முடிவு – புனித தோமியர் கல்லூரி 7 விக்கெட்டுக்காளல் வெற்றி