தங்கச் சமர் என வர்ணிக்கப்படும் மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 68ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று (09) ஆரம்பமானது.
இதுவரை மொத்தமாக 67 போட்டிகள் இடம்பெற்றுள்ளதுடன் இவற்றில் 6 போட்டிகளில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியும் 3 போட்டிகளில் புனித செபஸ்தியன் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளதுடன் ஏனைய போட்டிகள் யாவும் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான போட்டி மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித செபஸ்தியன் கல்லூரிக்கு வழங்கியது.
மனுல பெரேராவின் அபார பந்துவீச்சினால் முதல் நாள் றோயல் வசம்
இதன்படி முதலில் துடுபெடுத்தாடிய புனித செபஸ்தியன் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக ஜனிஷ்க பெரேரா அதிகபட்சமாக 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக் பந்து வீச்சில் கௌமால் நாணயக்கார 6 விக்கெட்டுக்களையும் சவிந்து பீரிஸ் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சந்துன் பெர்னாண்டோ 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.
போட்டியின் சுருக்கம்
புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 159 (50.1) -ஜனிஷ்க பெரேரா 32, நிஷித அபிலாஷ் 28, கௌமால் நாணயக்கார 6/45, சவிந்து பீரிஸ் 4/49
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 76/3 (35) – சந்துன் பெர்னாண்டோ 30*, சுவத் மென்டிஸ் 21, தாசிக் பெரேரா 2/17
போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்.