தமிழ் யூனியன் கழகத்துக்காக சதமடித்து அசத்திய ரவிந்து பெர்னாண்டோ

135

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கழகங்களுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது கட்டப் போட்டிகளின் கீழ் இன்று (01) பத்து போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இன்று நடைபெற்ற போட்டிகளில் தமிழ் யூனியன், கோல்ட்ஸ், ராகம, பதுரெலிய, SSC, சோனகர், செபஸ்டியன்ஸ், விமானப்படை, களுத்துறை நகரம், மற்றும் நுகேகொட விளையாட்டு கழகம் என்பன வெற்றிகளைப் பதிவு செய்தன.

சுவத், மலிந்துவின் அபாரத்தால் கொழும்பு கழகத்துக்கு வெற்றி

கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக பி.சரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரவிந்து பெர்னாண்டோவின் அபார சதத்தின் (107) உதவியுடன் 216 ஓட்டங்களால் தமிழ் யூனியன் ரிக்கெட் கழகம் அபார வெற்றயீட்டியது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் கனிஷ்க ஹசித 12 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இம்முறை போட்டித் தொடரில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

குழு C இற்காக நடைபெற்ற போட்டியில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தை 47 ஓட்டங்களுக்கு சுருட்டிய கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 162 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக தனஞ்சய லக்‌ஷான் துடுப்பாட்டத்தில் 88 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 4 விக்கெட்டுக்களையும், ரொஹான் சன்ஜய 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வலுச்சேர்த்தனர்.

இன்று இடம்பெற்ற போட்டிகளில் குழு D இற்கான போட்டி ஒன்றில் SSC கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 51 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த தொடரில் தமது ஐந்தாவது வெற்றியினைப் பதிவு செய்தது.

SSC கழகத்துக்காக நிபுன் தனன்ஞய ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 57 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்தனர்.

இதனிடையே, சிலாபம் மேரியன்ஸ் கழகத்துடனான போட்டியில் 39 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ராகம கிரிக்கெட் கழகம், இம்முறை போட்டித் தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

பவன், கல்ப சேத்தியவின் அரைச்சதத்தால் காலி கழகத்துக்கு வெற்றி

ராகம கிரக்கெட் கழகத்துக்காக நிஷான் மதுஷங்க அரைச்சதம் கடந்த 53 ஓட்டங்களை எடுக்க, பந்துவீச்சில் சஷிக துல்ஷான் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

(சோனகர் விளையாட்டு கழக மைதானம், கொழும்பு)

NCC கழகம் – 99/4 (16) – ஹசித போயகொட 28, தெவின் அமரசிங்க 28, கமில் மிஷார 23, மாலிங்க அமரசிங்க 2/16

சோனகர் விளையாட்டு கழகம் – 143/7 (18.4) – கவிஷ்க அன்ஜுல 61, பசிந்து சூரியபண்டார 31, மதீஷ பத்திரன 2/22

முடிவு – சோனகர் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி


நுகெகொட விளையாட்டடுக் கழகம் எதிர் BRC கழகம்

(BRC கழக மைதானம், கொழும்பு)

நுகெகொட விளையாட்டு கழகம் – 220/10 (48.4) – அபிஷேக் லியனாரச்சி 42, அமித் தாபரே 37, விக்கும் கல்ஹார 28, சகுன லியனகே 22, சவிந்து உத்ஷர 3/33, மலிந்த அபிஷேக் 2/33, கெவின் கொத்திகொட 2/43

BRC கழகம் – 196/10 (48.5) – ரமின்த விஜேசூரிய 42, சஷிக ரத்னாயக்க 32*, லஹிரு அத்தனாயக்க 28, தஷிக நிர்மால் 3/45, அமித தாபரே 2/23

முடிவு – நுகெகொட விளையாட்டு கழகம் 24 ஓட்டங்களால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

(சிலாபம் மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க)

ராகம கிரிக்கெட் கழகம் – 186/10 (50) – நிஷான் மதுஷங்க 53, டெல்லன் பீரிஸ் 27*, சன்ஜுல பண்டார 23, அசித பெர்னாண்டோ 3/27, தசுன் செனவிரத்ன 2/35

சிலாபம் மேரியன்ஸ் கழகம் – 147/10 (43.2) ரவீன் யஸஸ் 42, தசுன் செனவிரத்ன 33, சஷிக துல்ஷான் 5/18, நிபுன் காஞ்சன 2/28

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி


இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம் 

(சர்ரே மைதானம், மக்கொன)

இராணுவ கிரிக்கெட் கழகம் – 181/10 (45.2) – ஷெஹான் பெர்னாண்டோ 45, ஹேஷான் ஹெட்டியாரச்சி 41, சன்ஜீவ் குமாரசாமி 26, நிர்மல ரத்னாயக்க 2/20, ருசிர கொஸ்தா 2/33, மிஹிர தேனுர 2/35

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 185/5 (47.1) துனித் ஜயதுங்க 87*, மிதிர தேனுர 32, ஹேஷான் ஹெட்டியாரச்சி 2/33

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்  

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 182 (43.1) – அஷான் டில்ஹார 76, ஜனிந்து இனுவர 33, சமோத் சந்தரு 21, சஷிக ப்ரியமால் 3/35, நுஸ்கி அஹமட் 3/47

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 183/9 (40) – சாமிகர ஹேவகே 34, சந்தருவன் சின்தக்க 24*, சாபிக் இப்தாரி 23, ரவிந்து செம்பகுட்டிகே 21, சசன்க நிர்மால் 3/38, கௌமால் நாணயக்கார 2/27

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 1 விக்கெட்டினால் வெற்றி


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 127 (34) – டில்ஹார பொல்கம்பொல 52, கேஷர நுவன்த 21, லசிந்து அரோஷன 3/22, இஷங்க சிறிவர்தன 2/18

களுத்துறை நகர கழகம் – 133/8 (32.4) – ஷெஹான் டில்ஷான் 38, லக்ஷான் சசங்க 25, தேமால் பண்டார 3/33, கவிந்து ரித்மால் 2/24

முடிவு – களுத்துறை நகர கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<