Home Tamil நீலங்களின் சமரில் பந்துவீச்சில் மிரட்டிய றோயல் கல்லூரி வீரர்கள்

நீலங்களின் சமரில் பந்துவீச்சில் மிரட்டிய றோயல் கல்லூரி வீரர்கள்

225

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான நீலங்களின் சமர் (Battle of Blues) 142ஆவது கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் றோயல் கல்லூரி பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (28) ஆரம்பிக்கப்பட இருந்த இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம், நேற்று நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் போட்டியின் நாணய சுழற்சி இடம்பெற்றதுடன், இரண்டாம் நாள் ஆட்டம் 63 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் அணித் தலைவர் அஹன் விக்ரமசிங்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி, முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி வீரர்கள், றோயல் பந்துவீச்சாளர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வேகமாக விக்கெட்டுக்களை இழந்தனர்.

இதனால், அவ்வணி 47 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், வெளிச்சமின்மை காணரமாக இன்றைய நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

துடுப்பாட்டத்தில் புனித தோமியர் கல்லூரியின் ஆரம்ப வரிசை வீரர்கள் உட்பட 7 வீரர்கள் இரட்டை இலக்க ஓட்டத்தையேனும் பெறாமல் ஆட்டமிழந்தனர். இறுதியாக, பந்துவீச்சாளர்களான மஹித் 65 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, யசிரு ஆட்டமிழக்காமல் 97 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார்.

ஒரு கட்டத்தில் புனித தோமியர் கல்லூரி அணி 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், பின்னர் 35 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. எனினும், யசிரு மற்றும் மஹித் ஜோடி 9ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்துடன் அணியை மீட்டனர்.

றோயல் கல்லூரியின் பந்துவீச்சில் வலதுகை சுழற்பந்துவீச்சாளர் கிசான் 4 விக்கெட்டுக்களையும், செனால் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை இடம்பெறும். மூன்றாவது நாள் ஆட்டத்தின் நேரலையினை இரசிகர்களுக்கு ThePapare.com ஊடாக பார்வையிட முடியும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result

Match drawn

Royal College
112/4 (21.5)

S. Thomas’ College
89/10 (48.5) & 32/1 (13)

Batsmen R B 4s 6s SR
Anuk Palihawadana lbw b Dan Poddiwela 7 37 0 0 18.92
Romesh Mendis lbw b Sonal Amarasekara 0 4 0 0 0.00
Shalin De Mel lbw b Sonal Amarasekara 1 8 0 0 12.50
Ryan Fernando c Sadisha Rajapaksha b Sonal Amarasekara 0 3 0 0 0.00
Shenesh Hettiarachchi lbw b Kavindu Pathirathna 1 3 0 0 33.33
Caniston Gunathan c Ahan Wickramasinghe b Gishan Balasuriya 12 29 0 0 41.38
Nathan Caldera c Kavindu Pathirathna b Gishan Balasuriya 9 19 1 0 47.37
Thenuka Liyanagae c Sineth Jayawardena b Gishan Balasuriya 0 7 0 0 0.00
Yasiru Rodrigo not out 30 95 2 0 31.58
Mahith Perera b Gishan Balasuriya 22 64 1 0 34.38
Rajindo Thilakarathna c Dasis Manchanayake b Kavindu Pathirathna 0 19 0 0 0.00


Extras 7 (b 4 , lb 0 , nb 1, w 2, pen 0)
Total 89/10 (48.5 Overs, RR: 1.82)
Fall of Wickets 1-4 (1.4) Romesh Mendis, 2-6 (3.4) Shalin De Mel, 3-8 (5.1) Ryan Fernando, 4-9 (6.1) Shenesh Hettiarachchi, 5-21 (11.4) Anuk Palihawadana, 6-31 (16.4) Caniston Gunathan, 7-32 (18.1) Nathan Caldera, 8-35 (19) Thenuka Liyanagae, 9-73 (40.1) Mahith Perera,

Bowling O M R W Econ
Kavindu Pathirathna 9.5 1 17 2 1.79
Sonal Amarasekara 10 6 8 3 0.80
Dan Poddiwela 5 1 12 1 2.40
Gishan Balasuriya 16 4 39 4 2.44
Prashan Silva 7 2 9 0 1.29
Dasis Manchanayake 1 1 0 0 0.00
Batsmen R B 4s 6s SR
Sineth Jayawardena c Thenuka Liyanagae b Nathan Caldera 18 32 0 0 56.25
Isiwara Dissanayake b Rajindo Thilakarathna 47 65 3 0 72.31
Ahan Wickramasinghe b Yasiru Rodrigo 26 30 2 0 86.67
Sadisha Rajapaksha lbw b Yasiru Rodrigo 7 4 0 0 175.00
Kavindu Pathirathna not out 3 5 0 0 60.00
Sonal Amarasekara not out 1 1 0 0 100.00


Extras 10 (b 0 , lb 2 , nb 6, w 2, pen 0)
Total 112/4 (21.5 Overs, RR: 5.13)
Fall of Wickets 1-40 (10.3) Sineth Jayawardena,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 7.5 0 32 2 4.27
Caniston Gunathan 4 0 26 0 6.50
Anuk Palihawadana 4 0 8 0 2.00
Nathan Caldera 3 0 21 1 7.00
Shalin De Mel 1 0 9 0 9.00
Rajindo Thilakarathna 2 0 14 1 7.00


Batsmen R B 4s 6s SR
Anuk Palihawadana not out 12 43 1 0 27.91
Romesh Mendis b Sonal Amarasekara 0 6 0 0 0.00
Shalin De Mel not out 20 29 1 1 68.97


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 32/1 (13 Overs, RR: 2.46)
Bowling O M R W Econ
Kavindu Pathirathna 3 2 3 0 1.00
Sonal Amarasekara 5 1 15 1 3.00
Gishan Balasuriya 4 2 11 0 2.75
Dan Poddiwela 1 0 3 0 3.00