மழையினால் கைவிடப்பட்ட நீலங்களின் சமர் முதல்நாள் ஆட்டம்

216

நீலங்களின் சமர் (Battle of Blues) என அழைக்கப்படும், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான 142ஆவது கிரிக்கெட் பெரும் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டிருக்கின்றது.

>>3ஆம் இலக்கத்தில் விளையாட மிகவும் விரும்புகிறேன் – சரித்

இலங்கையின் முன்னணி பாடசாலைகள் இடையே நடைபெறுகின்ற மூன்று நாட்கள் கொண்ட நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி, இந்த ஆண்டு கொழும்பு SSC மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் இன்று கொழும்பில் பெய்த கனமழை காரணமாக போட்டியின் முதல்நாள் ஆட்டம் நாணய சுழற்சியுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது நாளை காலை 9.40 மணியளவில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நீலங்களின் சமரின் நடப்புச்சம்பியன்களாக கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்தப்போட்டியினை நேரலையினை இரசிகர்களுக்கு ThePapare.com ஊடாக பார்வையிட முடியும்.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>