இலங்கை தொடர்பில் ICC இன் தீர்மானம்

Sri Lanka Cricket

807
ICC lay down terms of Sri Lanka Cricket suspension

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய தீர்மானங்கள் குறித்த அறிவிப்புக்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (21) வெளியிட்டுள்ளது.

>> மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கும் கிரிக்கெட் வீராங்கனை

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் நடுவே ICC தம்முடனான  இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்துவத்தினை உடனடியாக இரத்துச் செய்வதாக குறிப்பிட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் அரசியல் தலையீடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே இந்த இரத்து இடம்பெற்றிருந்தது. 

விடயங்கள் இவ்வாறிருக்க ICC இன் நிர்வாகக் கூட்டத்தொடர் இன்று (21) இடம்பெற்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அங்கத்துவம் இரத்து செய்யப்பட்டது தொடர்பில் முக்கிய அறிவிப்புக்கள் சில வெளியிடப்பட்டிருக்கின்றன.

இதில் மிக முக்கிய அறிவிப்பாக இரத்து அமுலில் காணப்படுகின்ற போதிலும் இலங்கை கிரிக்கெட் அணியானது இருதரப்பு தொடர்கள் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் நிதி தொடர்பில் ICC கவனத்துடன் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது 

>> புதிய தலைவருடன் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸி.!

அதேநேரம் இலங்கை கிரிக்கெட்டின் ஸ்திரமற்ற நிலைமைகளை கருத்திற் கொண்டு, இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான .சி.சி. இளையோர் உலகக் கிண்ணத்தொடர் மாற்றம் செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<