சிறந்த விளையாட்டு உத்திகளைக் கொண்ட ரொனால்டோ யார்?

85
Ronaldo
 

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விடவும் பிரேஸில் முன்னாள் வீரர் ரொனால்டோ முன்களத்தல் அச்சுறுத்தல் மிக்கவர் என்று பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரர் மைக்கல் சில்வெஸ்ட்ரே குறிப்பிட்டுள்ளார்.

சில்வெஸ்ட்ரே இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடட் மற்றும் ஆர்சனல் அணிகள், இத்தாலியின் இன்டர் மிலான் உட்பட பல முன்னணி கால்பந்து கழகங்களுக்காகவும் ஆடியிருப்பதோடு பிரான்ஸ் தேசிய அணியிலும் இடம்பெற்றவராவார்.

ரொனால்டோக்களில் சிறந்தவர் யார்? : முன்னாள் வீரரின் கணிப்பு

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ரொனால்டோ நஸாரியோ..

இதில் பிஃபா கொன்பெடரேசன் கிண்ணத்தை இரண்டு முறையும், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை பல தடவைகளும் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் பட்டம் உட்பட பல கிண்ணங்களையும் வென்றிருக்கும் சில்வெஸ்ட்ரே சிறந்த பின்கள வீரர்களில் ஒருவராவார்.

அவர் மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக ஆடியபோது கிறிஸ்டியானோ ரொனால்டோவுடனும் இன்டர் மிலான் கழகத்திற்காக ஆடியபோது ரொனால்டோ நசாரியோவுடனும் ஒரே அணியில் விளையாடியுள்ளார். இரு ரொனால்டோக்களுடனும் ஆடக் கிடைத்தது தமது அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர்கள் இருவரிலும் பிரெசில் ரொனால்டோ ஆபாத்தான வீரர் என்று சில்வெஸ்ட்ரே தெரிவித்துள்ளார்.

“அவரை யாராலும் தடுக்க முடியாது. அந்தக் காலத்தில் அனைவரும் அவரை ‘El Fenomeno’ என்றே அழைப்பார்கள். நான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராக மாத்திரமல்ல கிறிஸ்டியானோவுடனும் ஒன்றாக ஆடியிருக்கிறேன். ஆனால் துரித ஆட்டத் திறன் அடிப்படையில் பார்த்தால் பிரேசிலின் ரொனால்டோ முன்னணியில் இருக்கிறார்.

அது மாத்திரமல்ல, அவரது அனைத்துச் செயற்பாடுகளும் உச்ச தரத்தில் இருக்கும். கிறிஸ்டியானோவை எடுத்துக் கொண்டால் அவர் பல சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துகின்ற முன்று நான்கு உத்திகளை எம்மால் ஊகிக்க முடியும். ஆனால் ரொனால்டோவை எடுத்துக் கொண்டால் அது முற்றாக மாறுபட்டது. அவர் அந்தந்த சந்தர்ப்பங்களில் புதுப்புதுப் பாணிகளை பயன்படுத்துவார். அதனால் அவரை எம்மால் வலது பக்கமாக அல்லது இடது

பக்கத்திற்கு துரத்திச் செல்ல முடியாது. ஏனென்றால் அவர் எப்படியாவது அவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மிடம் இரு நழுவிச் செல்வார்.

அவருக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு இடத்தில் இருந்தும் கோல் பெறும் திறன் இருந்தது. அவர் சில சந்தர்ப்பங்களில் அதிகம் ஒரு காலை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் விளையாடினார். ஆனால் அப்படிச் செய்யும் அவர் ஐரோப்பா எங்கும் இருக்கின்ற பின்கள வீரர்களை முறியடித்துச் செல்ல முடிந்தது” என்று சில்வெஸ்ட்ரே குறிப்பிட்டார்.

பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ தமது கால்பந்து வாழ்வில் மொத்தம் 414 கோல்களை பெற்றிருப்பதோடு 1994 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளார். அதேபோன்று சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பல்லோன் டிஓர் விருதை இரண்டு முறை வென்றிருக்கும் ரொனால்டோ கால்பந்து உலகில் தனிப்பட்ட மற்றும் அணிக்கான பல விருதுகளையும் வென்றுள்ளார். Embed –

தம்மை கேலி செய்த நெய்மாருக்கு நன்றி கூறிய ஹாலன்ட்

ஜெர்மனியின் பொருசியா டொர்ட்முண்ட் வீரர் ஏர்லிங் ஹாலன்ட் கோல் பெறும்..

மறுபுறம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ரொனால்டோவை பின்தள்ளி மொத்தம் 725 கோல்களை பெற்றிருப்பதோடு போர்த்துக்கல் அணியுடன் 2016 ஐரோப்பிய கிண்ணத்தையும் கால்பந்து கழகங்களுக்காக ஐந்து முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார். தவிர பல்லோன் டிஓர் விருதை 5 தடவைகள் வென்றிருக்கும் கிறிஸ்டியோனா ரொனால்டோ மேலும் பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார்.

எனவே தரவுகள் அடிப்படையில் பார்க்கும்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலையில் இருப்பதாக தெரிந்தாலும் பிரேசிலின் ரொனால்டோ கால்பந்தின் உச்ச கௌரவமாக கருதப்படுகின்ற உலகக் கிண்ணங்கள் இரண்டை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோன்று பிரேசில் ரொனால்டோ கால்பந்து வாழ்வு முழுவதும் பல சந்தர்ப்பங்களில் உபாதைகளுக்கு முகம்கொடுத்ததால் அவருக்கு தமது உச்ச திறமையை வெளிப்படுத்த முடியாமல்போனது என்பது பலரும் நம்புகின்ற விடயமாகும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<