மைதானத்தை சுவாரஷ்யமாக்கிய வோர்னரின் வலதுகை துடுப்பாட்டம்

514
Image Courtesy - www.tigercricket.com.bd

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும், அவுஸ்திரேலிய அணியின் இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர், நேற்றைய (16) ராங்பூர் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது வலதுகை துடுப்பாட்ட வீரராக மாறி துடுப்பெடுத்தாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

BPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு சிறைத் தண்டனை

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில், நேற்று (15) சில்ஹெட் …

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் நேற்றைய இரண்டாவது போட்டியில் டேவிட் வோர்னர் தலைமையிலான சில்ஹெட் சிக்ஸர்ஸ் மற்றும் மஷ்ரபீ மொர்டஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் வெற்றி, தோல்வியை விடவும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட விடயமாக, டேவிட் வோர்னரின் துடுப்பாட்டம் மாறியிருந்தது. குறிப்பாக ராங்பூர் ரைடர்ஸ் அணியின் கிரிஸ் கெயில் வீசிய 19வது ஓவர், போட்டியின் சுவாரஷ்யத்தை மேலும் அதிகரித்திருந்தது.

கிரிஸ் கெயிலின் 19வது ஓவரை எதிர்கொண்ட டேவிட் வோர்னர், அவரது முதல் பந்துக்கு 2 ஓட்டங்களை பெற்றதுடன், அடுத்த 2 பந்துகளுக்கும் ஓட்டங்களை பெறத் தவறினார். இதனயடுத்து 32 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை பெற்றிருந்த வோர்னர் வலதுகை துடுப்பாட்ட வீரராக மாறி துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி, வலதுகை துடுப்பாட்ட வீரராக மாறிய வோர்னர் கெயிலின் நான்காவது பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

இதனைத் தொடர்ந்து பந்து ஓவரின் 5வது பந்தை, ஸ்வீப் முறையில் பௌண்டரிக்கு விளாசிய இவர், இறுதிப் பந்தினை ரிவஸ் ஸ்வீப் முறையில் விளாசி பௌண்டரி எல்லைக்கு அனுப்பினார். இதன்போது, கெயிலை சீண்டும் வகையில் வோர்னர் நடனமாட, மைதானத்திலிருந்த ரசிகர்கள் உற்சாக கரகோசங்களை எழுப்பினர். இன்னிங்ஸின் இறுதியில் வோர்னர் 36 பந்துகளுக்கு 61 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 61

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியிலும் தோல்வியைத் தழுவி …

கிரிஸ் கெயில் பந்து வீசும் போது வலது கை துடுப்பாட்டம் சாதகமாக இருக்கும் என எனக்கு தோன்றியது. காரணம் அவர் பந்து வீசும் உயரம் மற்றும் அவர் பந்தை பதிக்கும் இடங்கள் இடதுகை துடுப்பாட்ட வீரருக்கு சற்று கடினம் என்பது எனக்கு தெரிந்தது. நான், கொல்ப் விளையாடும் போது, வலது கையில் பந்தை அடித்து பழக்கப்பட்டுள்ளேன். அதனால், உடனடியாக முடிவுசெய்து வலதுகை துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினேன். அது எனக்கு சாதகமாகவும் அமைந்ததுஎன டேவிட் வோர்னர் போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

டேவிட் வோர்னர், தனது சிறுவயதில் வலதுகை துடுப்பாட்ட வீரராகவே அவரது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். எனினும், இடையில் இடதுகை துடுப்பாட்ட வீரராக மாறிய இவர், இப்போதும் வலைப் பயிற்சியில் ஈடுபடும் போது வலதுகை துடுப்பாட்டத்தினால் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதேவேளை, டேவிட் வோர்னர் வலதுகை துடுப்பாட்ட வீரராக மாறி துடுப்பெடுத்தாடுவது முதற்தடவையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I போட்டியிலும் வலதுகை துடுப்பாட்ட வீரராக மாறி வோர்னர் துடுப்பெடுத்தாடியுள்ளார். குறித்த போட்டியில் கிரிஸ் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<