கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைந்த அடுத்த பிரபலம் ரிப்னாஸ்

878
Mohamed Rifnaz

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கால்பந்துக் கழகத்திற்கு, ரினௌள் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரிப்னாஸ் ஒரு சுதந்திர வீரர் பரிமாற்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு அணி அவருடன் ஒப்பந்தம் செய்ததை உறுதி செய்திருக்கும் நிலையில், திறமை மிக்க வீரர்களை கொண்ட அந்த கழகம் இரண்டு நாட்களுக்குள் 2ஆவது முன்னணி வீரருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் திகதி பெலிகன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ஷரித்த ரத்நாயக்க கொழும்பு அணிக்காக ஒப்பந்தமாகியமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கால்பந்துக் கழகத்தில் இணையும் ஷரித்த

குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தின்…

ThePapare.com ,க்கு பிரத்தியேக போட்டி அளித்த ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் ரிப்னாஸ் எனது கழக மட்ட கால்பந்து வாழ்வை ஆரம்பித்த கொழும்பு கால்பந்துக் கழகத்திற்கு மீண்டும் வந்திருப்பது சிறப்பானதாகும் என்று குறிப்பிட்டார்.  

அதேபோன்று, 2017 பருவகாலத்தில் ரினௌன் விளையாட்டுக் கழக வீரர் மொஹமட் பசால் மற்றும் பசுல் ரஹ்மான் ஆகியோருடன் ரிபானாஸும் கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைய அதிக வாய்ப்பு இருந்தது.    

எனினும், அவர் மற்றுமொரு ஆண்டு ரினௌன் அணியில் நீடித்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறைந்த ஒரு இளம் ரினௌன் கழகத்திற்கு ரிப்னாஸ் தலைமை வகித்தார். எனினும், அந்த அணியின் வெற்றியை இறுதிப் போட்டி வாரத்தில் கொழும்பு கால்பந்து அணியால் மாத்திரமே தடுக்க முடிந்தது. கடந்த பருவங்களில் கொழும்பு அணி ரினௌனின் சம்பியன் கிண்ண எதிர்பார்ப்பை தகர்த்த மூன்றாவது சந்தர்ப்பமாக அது இருந்தது.  

“அனுபவ வீரர்கள் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட ரினௌன் அணியில் இன்னொரு பருவத்திற்கு ஆடி கிண்ணத்தை வெல்ல நான் விரும்பினேன். துரதிஷ்டவசமாக நாம் தோல்வி அடைந்தோம். ரினௌனில் நான் இருந்த காலம் சிறப்பானது. இலங்கையில் இரண்டு சிறந்த பயிற்சியாளர்களான ரூமி மற்றும் அமானுல்லாவின் கீழ் பயிற்சி பெற முடிந்தது எனது அதிர்ஷ்டம்‘” என்று ரிப்னாஸ் குறிப்பிட்டார்.

மருதானை, ஸாஹிரா கல்லூரி உருவாக்கிய மற்றொரு பெருமை மிக்க வீரரான ரிப்னாஸ், 2010 – 2013 இல் ரிஸ்கான் பைசர் மற்றும் சர்வான் ஜோஹர் ஆகியோருடன் 19 வயதின் கீழ் அணியை பிரிதிநிதித்துவப்படுத்தினார்.

அவர் தனது பாடசாலை காலத்தில் பல சம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவருமாவார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டியின் 19 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் மற்றும் 2011 மற்றும் 2012இல் 19 வயதுக்கு உட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகள் சம்பியன்ஷிப் போன்ற முக்கிய தொடர்களில் கிண்ணம் வென்றமை இதில் முக்கியமானதாகும்.   

ரிப்னாஸ் 2012இல் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, அடுத்து ஒருசில ஆண்டுகள் 23 வயதுக்கு உட்பட்ட அணியில் ஆடினார். பின்னர் 2015இல் அவர் சிரேஷ்ட அணியில் இடம்பிடித்தார்.  

ஈகிள்ல் கால்பந்து கழகத்தின் தலைவராக சுஜான் பெரேரா

மாலைத்தீவுகளில் உள்ள முன்னணி கால்பந்து..

2010இல் ஸாஹிர கல்லூரியில் பயிற்சியாளர் பணியை ஆரம்பித்த கொழும்பு கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளர் மொஹமட் ரூமியின் வழிகாட்டலில் ரிப்னாஸ் 2012-2013ஆம் அண்டு காலப்பகுதியில் கொழும்பு அணிக்கு ஆடினார். அதனைத் தொடர்ந்து 2014இல் அவர் ரினௌன் அணிக்கு மாறினார்.

அதிரடியான மத்திய கள வீரரான அவரது அடுத்த மூன்று ஆண்டுகளும் சிறந்த பருவங்களாக இருந்தன. இதில் தலைமைப் பயிற்சியாளர் மொஹமட் அமானுல்லாவின் கீழ் 2017இல் அவர் அபார திறமையை வெளிக்காட்டினார். எனினும், அந்த பருவத்தில் அவர் கொழும்பு அணியிடம் பின்தங்கினார்.

ரூமியின் விருப்பத்திற்குரிய ஒருவரான ரிப்னாஸ் 2017இல் ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ணத்தின் இரண்டு கட்ட தகுதிகாண் போட்டிகளிலும் மோஹன் பகான் அணிக்கு எதிராக கொழும்பு கால்பந்து கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<