படகோட்டம் நிரல்படுத்தல் போட்டியிலும் மஹேஷுக்கு ஏமாற்றம்

2020 Tokyo Paralympics

108

டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் இரட்டைத் துடுப்பு படகோட்டத்தில் நிரல்படுத்தலுக்கான பி பிரிவு இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர் மஹேஷ் ஜயகொடி கடைசி இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். 

டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை நடைபெற்ற PR1 பிரிவு ஆண்கள் ஒற்றையர் இரட்டைத் துடுப்புப் படகோட்டத்தின் B பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் மஹேஷ் ஜயகொடி பங்குபற்றினார்

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்கள் அபார ஆற்றல்

ஆறு வீரர்கள் பங்குபற்றிய நிரல்படுத்தலுக்கான இப் போட்டியை 13 நிமிடங்கள், 12.33 செக்கன்களில் நிறைவுசெய்த மஹேஷ், 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதற்கமைய 12 வீரர்களுக்கான ஒட்டுமொத்த நிரல்படுத்தலில் மஹேஷ் ஜயகொடி 12ஆவது இடத்தைப் பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்று (12:16.80) மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மறுசுழற்சி எனும் ரெப்சேஜ் தகுதிகாண் சுற்று (11:21.31) ஆகியவற்றில் கடைசி இடத்தையே மஹேஷ் ஜயகொடி பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மஹேஷ் பங்குகொண்ட நிரல்படுத்தல் போட்டியில் ஷ் வீரர் எலெக்ஸி சுவாஸ்ஹெவ் முதலிடத்தையும், ஜேர்மனியின் மார்கஸ் க்லெம்ப் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதுஇவ்வாறிருக்க, தகுதிகாண் சுற்று மற்றும் ரெப்சேஜ் தகுதிகாண் சுற்று ஆகியவற்றின் மூலம் பதக்க நிலைகளுக்கான A பிரிவு இறுதிப் போட்டியில் யுக்ரெய்னின் ரோமன் போலியான்ஸ்கி (9:48.78) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பாராலிம்பிக் படகோட்டம்: மஹேஷ் B பிரிவு இறுதிப் போட்டிக்குத் தகுதி

அவுஸ்திரேலியாவின் எரிக் ஹோரி (10:00.92) வெள்ளிப் பதக்கத்தையும் பிரேசிலின் ரெனே கெம்பஸ் பெரெய்ரா (10:03.54) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு மிக்க வீரராக உள்ள தினேஷ் பிரியன்த ஹேரத் நாளை (30) காலை ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளார்

அதேபோல, சமித்த துலான் மற்றும் சம்பத் ஹெட்டியாரச்சி ஆகிய இருவரும் பங்கேற்கும் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நாளை பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<