“இங்கிலாந்து தொடர் நிறுத்தப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது” – மிக்கி ஆர்தர்

64
Mickey Arthur
Mickey Arthur

இலங்கை அணிக்கு எதிரான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தொடர் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) காரணமாக திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை ஏமாற்றத்துக்குறியது என இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். 

இலங்கை வீரர்களின் உடற்தகுதி பேணப்படுகிறதா?

உலகளாவிய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) காரணமாக…

 கொவிட்-19 வைரஸ் காரணமாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடரில் விளையாடாமல் இலங்கையிலிருந்து நாடு திரும்பியது. குறிப்பாக இங்கிலாந்து அணி முதல் பயிற்சிப் போட்டியில் விளையாடியதுடன், இரண்டாவது பயிற்சிப் போட்டியின் பாதியில் நாடு திரும்பியிருந்தது. 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டிருந்த இலங்கை அணி, பலம் மிக்க அணியாக இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருந்த போதும், துரதிஷ்டவசமாக தொடர் பிற்போடப்பட்டமையானது, ஏமாற்றத்துக்குறிய விடயமாகும் என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார். 

மிக்கி ஆர்தர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டமை ஏமாற்றத்துக்குறிய விடயமாகும். எனினும், இந்த தொடர் இவ்வருட இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியென்ற ரீதியில் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆனால், இங்கிலாந்து அணியை வீழ்த்துவது என்பது கடினமான விடயம். எனவே, நாம் நேர்த்திமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எமக்கு ஏற்ற வகையான கிரிக்கெட்டை விளையாடினால், எமது அணியால் அனைத்து அணிகளையும் வீழ்த்த முடியும்” 

இலங்கை T20I அணிக்கான எதிர்கால திட்டத்தை கூறும் மிக்கி ஆர்தர்!

T20I அணியை பொருத்தவரை, தங்களுடைய அணியின் பலத்தைக் கொண்டு திட்டங்களை…

இலங்கை அணியை பொருத்தவரை, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இதுவரை மூன்று தொடர்களில் விளையாடியுள்ளது. இதில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என சமப்படுத்திய இலங்கை அணி, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை இழந்திருந்தது. எனினும், மிக்கி ஆர்தரின்  வருகையின் பின்னர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் வெற்றியீட்டியுள்ளது. 

இந்த நிலையில், மிக்கி ஆர்தரின் பயிற்றுவிப்பில் இந்த வெற்றியுடனான ஆரம்பத்தை பெற்றுள்ள இலங்கை அணி, அதனை தொடர வேண்டும் என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.  “குறிப்பாக, நாம் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, வெற்றியுடன் கூடிய சிறந்த ஆரம்பத்தை பெற்றுள்ளோம். எதிர்வரும் போட்டிகளிலும் இந்த ஆரம்பத்தை கைவிடாமல் தொடர்வோம் என நம்புகிறேன்.

அதுமாத்திரமின்றி, எமது டெஸ்ட் அணியை பொருத்தவரை குறிக்கோள் ஒன்றுடன் பயணிக்கிறது. அத்துடன், எமக்கான சரியான வீரர்களும், சரியான போட்டி திட்டமும் உள்ளதால், எதிர்வரும் காலங்களில் சொந்த மண் மற்றும் வெளிநாடுகளிலும் எம்மால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என நம்புகிறோம்” என மிக்கி ஆர்தர் சுட்டிக்காட்டினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<