ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்

613

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும், பின்னடைவையும், அழிவையும் சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மிக விரைவில் மீளக் கட்டியெழுப்பவதற்கும் தான் உள்ளிட்ட தரப்பினர் இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறங்கியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உப தலைவரும், இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான இரு தரப்பினரும் தமது தேர்தல் பிரச்சாரங்களை வியாழக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்ததுடன், அங்கு இரு சாராரும் தமது எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடுவதற்கு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2018 முதல் 2021 வரையான 4 வருட காலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஜயந்த தர்மதாச மற்றும் கே. மதிவாணன் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பில் உள்ள நவலோக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஜயந்த தர்மதாச கருத்து வெளியிடுகையில், ”இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை சீர்குலைத்தது யார் என்பது பற்றி புதிதாக சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் யார் என்பது பற்றி முழு நாட்டு மக்களும் நன்கு அறிவர். கிரிக்கெட் கழக உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். நாங்கள் நிர்வாகத்துக்கு வந்த மூன்று மாதங்களில் அழிவுக்குள்ளான கிரிக்கெட் விளையாட்டை மீளக் கட்டியெழுப்புவோம் அதற்கு எம்மிடம் சிறந்த திட்டங்கள் உள்ளன. அதேபோன்று ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களை விரட்டியடித்து விட்டு தூய்மையான நிர்வாகமொன்றை முன்னெடுக்கவே நாங்கள் வந்துள்ளோம். ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நிர்வாகம் தேவையானால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

Photos: SLC Elections 2019/2020 – Jayantha Dharmadasa led group | Press Conference

உண்மையில் கடந்த காலங்களில் நிர்வாகம் ஒன்று நடக்கவில்லை. என்னுடைய நிர்வாகத்தின் கீழ் தான் இலங்கை அணி, டி-20 உலகக் கிணணத்தையும், ஆசிய கிண்ணத்தையும் கைப்பற்றியது. அதன்பிறகுதான் இலங்கை அணி பின்னடைவை நோக்கிச் சென்றது. முன்னாள் நிர்வாகிகளுக்கு கிரிக்கெட் அல்ல பணம் தான் தேவை. அந்தப் பணத்துக்காகவும், தனது தன்மானத்தை பாதுகாக்கவும் ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு போக முடியாது என தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு இந்நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதே பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. எனவே இம்முறை தேர்தலில் எனக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்” என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இதேநேரம், தான் கிரிக்கெட் விளையாட்டில் ஒருபோதும் ஈடுபடவில்லை என எதிரணியினர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கு ஜயந்த தர்மதாச கருத்து வெளியிடுகையில்,

ஹரீனின் புது வியூகம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக அமையுமா?

மேசன் தொழில் செய்பவருக்கு தச்சுத் தொழிலும், தச்சுத் தொழில் செய்வருக்கு மேசன் தொழிலும் செய்ய முடியாது

நானும், எனது தம்பி உபாலி தர்மதாசவும் வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். இலங்கையில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்கள் அங்கிருந்து தான் இனங்கண்டு கொள்ளப்படுகின்றனர். நாங்கள் வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் என்ற காரணத்தால், எம்மை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வரமுடியாமல் செய்வதற்கு பிரீமியர் லீக் போட்டித் தொடரிலிருந்து வர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி நீக்கப்பட்டது. ஆனால் அந்த சங்கத்துக்கு தற்போது இரண்டு வாக்குகள் உள்ளன.

அதேபோல தேர்தல் போட்டியிடுவதற்கு எனக்கு தேர்தல் செயற்குழுவினால் எந்தவொரு எதிர்ப்பும் முன்வைக்கப்படவில்லை. நான் சட்டத்தை மீறி ஒருநாளும் தேர்தலில் களமிறங்கியது கிடையாது. 40 வருடங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என என்னால் கூறியிருக்க முடியும். ஆனால் அந்த தரவுகளை தற்போது தேடினாலும் கிடைக்காது. அதேபோன்று நான் ஒருபோதும் மோசடி செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நான் இன்று திலங்க சுமதிபாலவின் தரப்பில் அமர்ந்திருப்பேன். நான் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளராக சுமார் 5 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். தற்போதுள்ள பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸனைத் தவிர ஐ.சி.சி இன் எந்தவொரு பணிப்பாளரும் கிரிக்கெட் விளையாடியது கிடையாது.

Photos: SLC Elections 2019/2020 – Mohan De Silva led group | Press Conference

அத்துடன், இறுதியாக நடைபெற்ற தேர்தலில் எனக்கு கிடைத்த வாக்குகளைக் கொண்டுதான் திலங்க சுமதிபால வெற்றி பெற்றார். ஆனால் உப தலைவராக என்னுடைய கருத்துக்களுக்கு செவிசாய்க்காத காரணத்தால் அப்பதவியை ராஜினாமாச் செய்தேன். மேலும் கடந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற தவறுகளை சுட்டிக்காட்டி நானும், மதிவாணனும் திலங்க சுமதிபாலவுக்கு பல தடவைகள் கடிதம் எழுதியிருந்தோம். ஆனால் அவரும் திருத்துவேன் என்றார்.

இது இவ்வாறிருக்க, இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டியிடுகின்றனர். இதில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான நிஷாந்த ரணதுங்க இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில்,

”கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிக்கின்ற அணிதான் இங்குள்ளது. முன்னாள் நிர்வாகிகளின் தவறான முடிவுகள் மற்றும் ஊழல்களினால் பின்னடைவை சந்தித்த இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்கவே நாங்கள் வந்துள்ளோம். 4 பில்லியன்கள் இலாபம் ஈட்டினார்கள் என்பது மிகப் பெரிய பொய்யாகும். அந்தப் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என்பதை முதலில் வெளியடுமாறு சொல்லுங்கள். 2017 இல் கிடைத்த பணத்தைத் தான் இலாபம் என சொல்கின்றனர். எனவே எவ்வாறு இலாபம் கிடைத்தது என்பது பற்றி முதலில் தெளிவுபடுத்துமாறு அவர்களுக்கு நான் சவால் விடுக்கிறேன் என்றார்.

வருடமொன்றுக்கு 12 முதல் 14 அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வருமானமாக பெற்றுக் கொள்கின்றது என நான் நம்புகிறேன். எனவே பொருளாளர் பதவியில் இருக்க வேண்டிய நபர் குறைந்தபட்சம் கணக்காய்வாளர் பட்டப்படிப்பையாவது முடித்திருக்க வேண்டும். ஆனால் கடந்த நிர்வாகத்தில் பல தடவைகள் அப்பதவியில் இருந்தவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதுதான் கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. எனவே இது தொடர்பில் பேசுவதற்கு நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு எதிரணியினரை வருமாறும் கேட்டுக்கொள்வதாக” அவர் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டுப் பேரவையின் புதிய அங்கத்தவர்கள் நியமனம்

இலங்கையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் முன்னாள் இராணுவ தளபதி

அதேபோன்று நாங்கள் நிர்வாகத்துக்கு வந்தவுடன் வீரர்களின் மனோநிலையை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது ஒழுக்கங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவோம். உண்மையில் நாட்டுப் பற்றுடன் விளையாடுகின்ற வீரர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகத் தெரிவித்து தற்போது உப தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள கே. மதிவாணன் கருத்து வெளியிடுகையில்,

”திலங்க சுமதிபாலவின் தலைமையிலான நிர்வாகத்தில் இருந்து ஜயந்த தர்மதாச ஆறு மாதங்களின் பிறகு விலகிச் சென்றார். ஆனால் நான் இரண்டரை வருடங்கள் நிறைவடையும் வரை நிர்வாகத்தில் இருந்தேன். ஏனெனில் நானும் அவ்வாறு விலகியிருந்தால் மேலும் பல ஊழல் மோசடிகளை செய்வதற்கு அவர்களுக்கு இன்னும் இலகுவாக இருந்திருக்க முடியும். ஆனால் எனது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்தேன். அதிலும் குறிப்பாக பல இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பதவியில் தொடர்ந்து நீடித்தேன்” என தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரணதுங்க தரப்பில் உப செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஹிரன்த பெரேரா, பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஈஸ்மன் நாரங்கொட மற்றும் உப பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற சன்ஜய சேதர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க